கொமன்வெல்த் மாநாட்டை ஆபிரிக்க நாடுகள் பலவும் புறக்கணிக்க முடிவு

21.10.13

சிறிலங்காவில் அடுத்தமாதம் நடக்கவுள்ள 23வது கொமன்வெல்த் உச்சிமாநாட்டை, ஆபிரிக்க நாடுகள் பலவும் புறக்கணிக்கலாம் என்று கென்ய செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று ஆபிரிக்க நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், இந்த மாநாட்டைப் புறக்கணிக்கும் விவகாரத்தில் கென்யா மட்டும் அமைதி காத்து வருகிறது.

ஆனால், உகண்டா, தன்சானியா, ருவாண்டா, நைஜீரியா, தென்னாபிரிக்கா, சாம்பியா ஆகிய நாடுகள் மாநாட்டைப் புறக்கணிக்கும் திட்டத்துடன் இணைந்திருப்பதால், அவை கொழும்பு மாநாட்டை தவறவிடக் கூடும்.
அதேவேளை, கொமன்வெல்த்தில், இணைந்து கொள்வதற்கு தென்சூடான் மற்றும் புரூண்டி ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை இடைநிறுத்தியுள்ளன.

ஏற்கனவே கொபமன்வெல்த் அமைப்பில் இருந்தே வெளியேறப் போவதாக, காம்பியா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :