யாழ்.குடாநாட்டினை கலக்கி வரும் நாகர் படையணி

23.10.13

யாழ்.குடாநாட்டினை கலக்கி வரும் நாகர் படையணி எச்சரிக்கை கடிதங்கள் அரச ஆதரவு தரப்புக்கள் பலவற்றையும் அதிர்ச்சியினில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக வல்வெட்டித்துறையுள்ளிட்ட சில பகுதிகிளினல் நேரடியாக தனித்தனி முகவரியிட்டு இத்தகைய எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்த்தேசியத்தை கருவறுக்கும் அரசகைக்கூலிகளாக இனியும் செயற்பட்டால் கடுமையான தண்டனைகளைச் சந்திக்க நேரிடும் என்று அரச ஆதரவு ஒட்டுக்குழுவை சேர்ந்தவர்களிற்கு பரவலாக ‘நாகர் படையணி” என்ற அமைப்பால் எச்சரிக்கைக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. வடக்குமாகாண சபைத்தேர்தல் தந்த மோசமான தோல்வியால் விரக்தியில் இருந்த ஈ.பி.டி.பியினருக்கு ‘நாகர் படையணி’ என்ற அநாமதேயக் கடிதம் இன்னும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வெட்டி ஒட்டப்பட்ட புலிச்சின்னத்தைக் கொண்ட கடிதத்தலைப்பிலேயே இந்த எச்சரிக்கைக்கடிதம் ஈ.பி.டி.பி உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் உயிர்  அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துக்கள் :