ஏஞ்சலா மேர்கலின் தொலைபேசியை அமெரிக்கா ஒட்டுக்கேட்டதாக பரபரப்பு

24.10.13

ஜேர்மனிய சான்ஸ்லர் ஏஞ்சலா மேர்கலின் தொலைபேசியை அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கண்காணித்ததாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இவ்விடயம் தொடர்பில் கடும் விசனமடைந்த ஏஞ்சலா மேர்கல், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் தொடர்புகொண்டு விளக்கம் கோரியுள்ளார். சில தினங்களுக்கு முன் பிரான்ஸை சேர்ந்த மில்லியன் கணக்கான மக்களின் தொலைபேசி உரையாடல்களையும் குறுஞ்செய்திகளையும் அமெரிக்க தேசிய புலனாய்வு முகவரகம் இலக்கு வைத்ததாக தகவல்கள் வெளியாகின. அதையடுத்து பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹொலண்டேயும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன் விவாதிப்பதற்காக வெள்ளை மாளிகைக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :