சுவிஸ் தமிழர் நினைவேந்தல் அகவம் விடுக்கும் அறிவிப்பு!

27.10.13

'மண்ணின் மைந்தர்களான மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களையும் நான் போற்றுகிறேன். உங்களது குழந்தைகள் தமது உயிருக்கும் மேலாக தமது தாய்நாட்டின் சுதந்திரத்தை நேசித்தார்கள். இந்த உத்தமமானவர்களை ஒரு புனித இலட்சியத்திற்கு உவந்தளித்த பெற்றோராகிய நீங்கள் நிச்சயம் பெருமை கொள்ளவேண்டும். உங்களது குழந்தைகள் சாகவில்லை சரித்திரமாகி விட்டார்கள்
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்

மதிப்பிற்குரிய சுவிஸ்வாழ் மாவீரர் உறவுகளே.
அன்புடன் வணக்கம்.
ஒடுக்கப்பட்ட தமிழினத்தின் விடுதலைக்காக இறுதிவரை போராடி மரணித்த மாவீரர்களை நினைவுகூர்வதுடன் அவர்களின் தியாகத்தினையும் கொண்ட இலட்சியத்தின்மீதும் பற்றுறுதிகொண்டு தொடர்ந்துபோராடி தமிழனத்தின் விடுதலையை பெற்றெடுக்கவேண்டியது தமிழர் ஒவ்வொருவரினதும் வரலாற்றுக் கடமையாகும்.


அந்தவகையில் விடுதலையின் மூச்சாகப் போராடி மடிந்த எங்கள் மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் 2013 நிகழ்வினை சுவிசில் நடாத்துவதற்கான ஒழுங்குகளை சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மேற்கொண்டுவருவது தாங்கள் அறிந்ததே. இந் நிகழ்வில் தமிழர் நினைவேந்தல் அகவமும் வழமைபோன்று தன்பணியை சிறப்புற ஆற்றுவதற்கு தங்களின் முழுமையான ஒத்துழைப்பினை வேண்டிநிற்கின்றது.
தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் தரவுகளை திருவுருவப்படத்துடன் எமக்கு இன்றுவரை அனுப்பிவைக்காதவர்கள் அதனை காலதாமதமின்றி 20.11.2013ற்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
சுவிஸ்வாழ் தமிழ் உறவுகளின் மாவீரர்களினது தரவுகளை உள்ளடக்கிய நூல் ஒன்றினை காலப்போக்கில் வெளியிடுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம். அதற்கேற்றவகையில் இன்றுவரை வீரச்சாவடைந்த சுவிஸ்வாழ் தமிழ் உறவுகளின் மாவீரர்களினது தரவுகள் சில எமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. அவ்வாறான மாவீரர்களினது தரவுகளையும் முழுமையாகப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். எனவே மாவீரரான தங்கள் உறவுகளின் தரவுகள் ஏதாவது இன்றுவரை எமக்கு அறிவிக்கப்படாமல் இருந்தால் அவற்றினையும் தாமதமின்றி அறியத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழினத்தின் விடுதலைக்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்துப் போராடிய தங்கள் உறவுகளை தமிழினம் என்றும் நெஞ்சில் நிலைநிறுத்திக்கொள்ளும்.
                                                 'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்'
நன்றி.
தொடர்புகளுக்கு:Tamilar Remembrance Foundation – Swiss, Postfach 439, 4528 Zuchwil.
076 426 27 80, 076 528 71 12, 078 662 93 06, trfswiss@gmail.com

0 கருத்துக்கள் :