இந்தியா காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால்??விக்னேஸ்வரன் அழைப்பு

30.10.13

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து அரசியல் ஆலோசர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக அரசு மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இலங்கை வடக்கு மாகாண முதல் அமைச்சர் விக்னேஸ்வரன், காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுத்துள்ளார். மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் தமிழர் நலனுக்கான நடவடிக்கைகளை இந்தியா தொடர முடியும் என்று விக்னேஸ்வரன் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

காமன்வெல்த் மாநாட்டுக்கு செல்லும் பிரிட்டன் பிரதமர் கேமரூன், யாழ்ப்பாணத்திற்கு செல்வதாக அறிவிக்கப்பட்டது. அவரைப்போல மன்மோகன் சிங்கும் யாழ்ப்பாணத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மாநாட்டை இந்தியா புறக்கணித்தால் சீனா, பாகிஸ்தான் உடனான நட்பை இலங்கை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில்தான் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து அரசியல் ஆலோசர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

0 கருத்துக்கள் :