தலைவர் பிரபாகரனின் வீடு பாரிய சத்தத்துடன் சற்று முன்னர் தகர்ப்பு

3.10.13

விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் சரித்திர முக்கியத் துவம் வாய்ந்த இடம் திட்டமிட்ட வகையில் இலங்கை இராணுவத்தால் தகர்ப்பு.

புதுக்குடியிருப்பிற்கும் ஒட்டிசுட்டானுக்கும் இடையில் வேனாவில் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் தலைமை வசித்ததாகக் கூறப்பட்டதுடன் விடுதலைப்புpகளின் காலத்தில் சரித்திர முக்கியத் துவம் வாய்ந்த இடமாகவும் கருதப்பட்ட இடம் இன்று மாலை 6.40 மணியளவில் இலங்கை இராணுவத்தால் திட்டமிட்ட வகையில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

இவ் வீடு புலிகளின் தலைவர் வசித்ததற்கான பல ஆதாரங்கள் உள்ளதுடன் நிலத்திற்குக் கீழ் மூன்று மாடிகளைக் உடைய கட்டமைப்பில் உள்ள மிகவும் விசித்திரக் கட்டமைப்பான வீடாக மக்கள் கூறுகின்றனர்

இச்சம்பவம் இடம் பெறுவதற்கு முன்னதாக 5.30 மணியளவில் இவ் வீட்டை அன்டியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதுடன் இச்சம்பவம் இடம் பெற்ற வேளை மக்களை வீடுகளுக்குள் முடக்கி வைத்து விட்டு இவ்வாறான வேலைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டதாககவும்

வெளிமாவட்ட மக்கள் பலர் இவ்விடத்ததை அன்மைக்காலத்தில் பார்வையிடுவது அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் விடுதலைப் புலிகள் மீதான அனுதாபம் தென்னிலங்கையில் அதிகரிப்பதாகவும் அதனால் இச் செயற்பாட்டை செய்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரி தெரிவித்தார் என்றுசெய்திகள் தெரிவிக்கின்றன.

0 கருத்துக்கள் :