இந்தியா பொதுநலவாய நாடுகளின் மாநாட்டைப புறக்கணிக்க வேண்டும்.சரத்குமார்

30.10.13

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர், அதிகாரிகள் உட்பட எவரும் பங்கேற்கக் கூடாது என தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனாலும் இலங்கை மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்று சில மத்திய அமைச்சர்களும், பங்கேற்காது என்று சில மத்திய அமைச்சர்களும் முரண்பட்ட வகையில் பேசி வருகின்றனர்.

லட்சக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், சட்டப்பேரவைத் தீர்மானத்துக்கும் மதிப்பளித்து இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டை இந்தியா முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

0 கருத்துக்கள் :