துஷாவின் உறுதி என்னால் எழுந்து நிற்கமுடியும்! கால்கள் செயற்படத் தொடங்கின

10.10.13

பிரித்தானியாவின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான மிக இளம்வயது சிறுமியான துஷா கமலேஷ்வரன், தனது பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல குணமடந்தவரின் கால் தற்போது செயற்படத் தொடங்கியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இரு வருடத்திற்கு முன்னர் தெற்கு லண்டனின் கடையொன்றில் வைத்து, கோஷ்டி மோதலில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் துஷா கமலேஸ்வரன். 

அன்றிரவு அவசரமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், இரு தடவை அவரது இதயம் நின்று துடித்தது. எனினும் மருத்துவர்களின் கடும் முயற்சியால் உயிர் தப்பினார். 

12 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வீடு திரும்பிய போதிலும் அவர் நடப்பதற்குரிய சந்தர்ப்பம் மிக சொற்ப அளவிலேயே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆனால் துஷாவின் உறுதியான நம்பிக்கையினால் தற்போது அவரின் கால்களுக்கு உணர்ச்சி வந்துள்ளதாக வும் தன்னால் சுயமாக எழுந்து நிற்கக்கூடியதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

செயலிழந்து போனதாக தெரிவித்திருந்த மருத்துவர்கள் துஷாவின் கால்களுக்கு உணர்ச்சி இருப்பதையும், துஷா எழுந்து நிற்பதையும் பார்த்து அதிசயித்துப் போனதாகவும் லண்டன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

துஷாவுக்கு இருக்கும் தைரியமும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையுடன் மேலும் சிகிச்சை அளிப்பின் எழுந்து நிற்கும் துஷா  எதிர்காலத்தில் நடக்கவும் முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துக்கள் :