வடக்கு, கிழக்கை இணைப்பதற்கு கூட்டமைப்பு முயன்றால் பதிலடி : பொதுபலசேனா

16.10.13

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வெற்­றி­யா­னது வர­வேற்­கத்­தக்­கது. ஆனால்இ இவ் வெற்­றியை வைத்துபிரி­வி­னை­வாதம் பேசு­வது தவ­றாகும். வடக்­கையும் கிழக்­கையும் ஒன்­றி­ணைக்க முயன்றால் அதற்­கான பதி­ல­டியை நாம் கொடுப்போம் என பொது­ப­ல­சேனா அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

நாட்டை சீர­ழிக்கும் விட­யத்தை யார் செய்­தாலும் அதற்கு நாம் எதிர்ப்­பி­னையே தெரி­விப்போம். கசினோ சூதாட்ட விட­யத்தில் அர­சாங்­கத்தை கடு­மை­யாக எச்­ச­ரிக்­கின்றோம் எனவும் அவ் அமைப்பு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.
இது தொடர்­பாக பொது­ப­ல­சேனா பெளத்த அமைப்பின் தலைவர் கிரம விம­ல­ஜோதி தேரர் தெரி­விக்­கையில்,

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வட­மா­கா­ணத்தில் வர­லாற்று வெற்­றி­யினைப் பெற்­றுள்­ளமை வர­வேற்­கத்­தக்­கது. ஆனால்,தமது வெற்­றி­யினை தவ­றாக பயன்­ப­டுத்­து­கின்­ற­மை­யா­னது ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. வடக்கில் ஆட்­சி­ய­மைத்து மக்­க­ளுக்­காக சேவை­யாற்­றாது அவர்­களின் சுய­ந­லத்­திற்­காக மக்­களை கொல்ல நினைப்­பது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னதும் சர்­வ­தே­சத்­தி­னதும் சதித்­திட்­ட­மாகும்.இதைத் தொடர்ந்தும் நடை­மு­றைப்­ப­டுத்­தினால் தற்­போது வடக்கில் வாழும் மக்­களும் இறக்க நேரிடும்.

தமது சுய விருப்­பிற்­காக மத்­திய அர­சாங்­கத்தை கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் அனைத்து மாகா­ணங்­க­ளுக்கும் அனைத்து இன மக்­க­ளுக்கும் ஒரே சட்­டமே செயற்­ப­டு­கின்­றது. இதில் வட மாகா­ணத்­திற்கு ஒரு மாதி­ரியும் ஏனைய மாகா­ணங்­க­ளுக்கு வேறு மாதி­ரியும் சட்­டத்தை பிர­யோ­கித்தால் அது இறுதியில் சட்டச் சிக்­க­லி­னையும் பிரி­வி­னை­யி­னை­யுமே ஏற்­ப­டுத்தும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.
இது தொடர்­பாக பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் குறிப்­பி­டு­கையில்இ
வடக்­கையும் கிழக்­கையும் ஒன்­றி­ணைத்து தனி நாட்டுக் கோரிக்­கை­யினை நடை­மு­றைப்­ப­டுத்த தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு நினைத்தால் அதற்­கான தகுந்த பதி­ல­டி­யினை நாம் கொடுப்போம்.

 கிழக்கில் முஸ்லிம் தீவி­ர­வாத சக்­தி­களும் வடக்கில் புலித்­தீ­விர வாதி­களும் ஒன்­றி­ணைந்து வடக்­கிலும் கிழக்­கிலும் வாழும் தமிழ்இமுஸ்லிம் மக்­களை கொன்று குவிக்­கவே திட்டம் தீட்­டு­கின்­றனர். இதை நடை­மு­றைப்­ப­டுத்த விடக்­கூ­டாது.

பணத்தின் மீதுள்ள பேரா­சை­க­ளினால் அப்­பாவி மக்­க­ளையும் நாட்டின் கலா­சா­ரத்­தி­னையும் சீர­ழித்து விடக்­கூ­டாது. இலங்கையில் பாரிய அளவிலான மோசமான நோய்கள் எவையும் இது வரையில் இனங்காணப்படவில்லை. மக்கள் சுகாதாரமாகவும் நோயின்றிய வாழ்க்கையினையுமே அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதை கெடுக்கும் வகையில் வெளிநா டுகளில் இருந்து மோசமான நோய்களை இங்கு பரப்பி நாட்டினை வீணடிப்பதை அரசாங்கம் இப்போதே தடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :