பதவிப்பிரமாணம் செய்யாத கூட்டமைப்பினரை எச்சரிக்கும்: மன்னார் ஆயர்

14.10.13

அமைச்­சர்­களின் பத­விப்­பி­ர­மாண நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் அங்கம் வகிக்கும் உறுப்­பி­னர்கள் ஒரு சிலர் கலந்து கொள்­ளாமை கவலை தரு­வதும் கண்­டிக்­கத்­தக்­க­து­மான விட­ய­மாகும். மக்­களின் நம்­பிக்­கை­களை வீண­டிக்கும் முறையில் அவர்கள் நடந்து கொள்­ளக்­கூ­டாது என்று மன்னார் ஆயர் வணக்­கத்­துக்­கு­ரிய இரா­யப்பு ஜோசப் தெரி­வித்தார்.

வடக்கு மாகாண அமைச்­சர்கள் பத­விப்­பி­ர­மாண வைபவம் கடந்த வியா­ழக்­கி­ழமை யாழ்ப்­பாணம் வீர­சிங்கம் மண்­ட­பத்தில் சம்­பி­ர­தாய பூர்­வ­மாக முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் முன்­னி­லையில் நடை­பெற்ற போது கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு சில கட்­சி­களும் அதன் உறுப்­பி­னர்­களும் மாகாண சபைக்கு தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­களும் கலந்து கொள்­ளாமை பற்றி தனது கவ­லையைத் தெரி­வித்த போதே ஆயர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்து தனது கருத்தை தெரி­விக்­கையில்,
வர­லாற்றில் முதல் தட­வை­யாக வடக்கின் அமைச்­சர்­க­ளாக தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­களின் பத­விப்­பி­ர­மா­ணத்தைக் கண்டு களிக்க ஏரா­ள­மான பொது மக்கள் பிர­சன்­ன­மா­யி­ருந்­தமை கண்டு மிகுந்த மகிழ்ச்­சி­ய­டைந்­தி­ருந்தோம்.
அதே­வேளை, தமது கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அமைச்சுப் பதவி கிடைக்கவில்­லை­ என்­ப­தற்­காக ஒரு சில கட்­சி­களும் அதன் உறுப்­பி­னர்­களும் கலந்து கொள்­ளாமை கவ­லை ­த­ரு­கின்ற ஒரு விட­ய­மாகும். அதே­வேளை கண்­டிக்­கத்­தக்க விட­ய­மா­கவும் உள்­ளது.

மக்கள் எந்தக் குறி­கோ­ளோடும் அபி­லா­ஷை­க­ளோடும் இவர்­களை தெரிவு செய்­தார்­களோ அதைப் பாழாக்கும் முறையில் இவர்கள் நடந்து கொண்­டுள்­ளனர்.முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் ஜனா­தி­ப­திக்கு முன்­பாக பத­விப்­பி­ர­மாணம் செய்து கொண்­டது பற்றி பல வித­மான அபிப்­பி­ரா­யங்கள் சொல்­லப்­பட்­டன. முதலமைச்சர் தனது அனு­ப­வத்தின் அடிப்­ப­டையில் இந்த தீர்­மா­னத்தை மேற்­கொண்­டி­ருக்­கலாம். அர­சாங்­கத்­துடன் பேசு­வதன் மூலமே தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வைப் பெற­மு­டியும் என்­பதை சிந்­தித்தே அந்த முடிவை மேற்­கொண்­டி­ருந்தார்.

அது மாத்­தி­ர­மன்றி இலங்கை அர­சுடன் பேச வேண்டும். சர்­வ­தேச சமூ­கத்­துடன் பேச வேண்டும் உலக நாடு­க­ளுடன் தொடர்பு கொள்ள வேண்டும். அப்­போது தான் சம நிலை­யான ஒரு சூழ்­நி­லையை உருவாக்­க ­மு­டியும்.அப்­போது தான் தீர்­வொன்­றுக்கு வழி­பி­றக்க முடியும். அவர் அவ்­வா­றான ஒரு முடிவை எடுத்­தது பற்றி நான் பெரு­மைப்­ப­டு­கின்றேன். அவரின் தீர்க்­க­த­ரி­சன முடிவை நாம் எல்­லோரும் ஆத­ரிக்க வேண்டும்.

முதலமைச்சர் சத்­தியப் பிர­மாண வைப­வத்­துக்கும் கூட்­ட­மைப்­புக்குள் உள்ள பலர் சமுக­ம­ளிக்­காமை கவலை தரு­கின்ற விட­ய­மாகும்.தேசியத் தன்மை வாய்ந்த சுய­நிர்­ண­யத்­துடன் கூடிய தீர்­வொன்றை மக்­க­ளுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும். வடக்குக் கிழக்கை இணைத்த முறையில் காத்­தி­ர­மான தீர்­வொன்றை அடைய வேண்­டு­மென்­ப­தற்­கா­கவே அவரின் செயற்­பா­டுகள் அமைந்து காணப்­ப­டு­கின்­றன.வடக்கு கிழக்கு பிரிக்க முடி­யாத இணைவு கொண்­டது. அந்தப் பிர­தே­சத்­துக்கு தேசி­யத்தை ஏற்­றுக்­கொண்டு சுய­நிர்­ணய அடிப்­ப­டை­யி­லான தீர்­வொன்றை எங்­க­ளுக்குப் பெற்றுத் தரு­வார்கள் என்ற கார­ண­மா­கவே இந்த தேர்­தலில் கூட்­ட­மைப்­புக்கு மக்கள் அமோக ஆத­ரவை வழங்­கி­யி­ருக்­கி­றார்கள்.

எனவே இதற்­காக உழைக்­கின்ற, பாடு­ப­டு­கின்ற போக்கு அண்­மையில் குறைந்து போன­தா­கவே காணப்­ப­டு­கின்­றது.
மக்கள் அணி­தி­ரண்டு தமிழ்த் தேசி­யத்­துக்கு அளித்த ஆத­ரவும் நோக்­கமும் தளர்ச்சி அடைந்து விடுமோ என நாம் இப்­பொ­ழுது அச்சம் கொள்ள வேண்­டி­யி­ருக்­கி­றது. ஆகவே மக்­க­ளு­டைய நம்­பிக்­கையை நாம் யாரும் வீண­டிக்க கூடாது பாழாக்கக் கூடாது.இதை மனதில் கொண்டே முத­ல­மைச்சர் செயற்­பட்டு வரு­கிறார் என நம்­பு­கின்றோம். எனவே எமது கட்­சிக்கு அமைச்சுப் பதவி கிடைக்­க­வில்லை எனக்குக் கிடைக்­க­வில்லை என்­ப­தனை மறந்து நாம் ஒவ்­வொ­ரு­வரும் செயற்­பட வேண்டும். மொத்­தத்தில் அமைச்சர் பதவி நான்கு மட்­டு­மே­யுண்டு. இதை வெற்றி பெற்ற 30 பேருக்கும் பங்­கிட முடி­யாது என்­பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

தகை­மை­யுள்­ள­வர்­க­ளுக்கும் திற­மை­யுள்­ள­வர்­க­ளுக்கும் மட்­டுமே அத்­த­கைய பத­வி­களை வழங்க முடியும். அனு­ப­வத்தின் அடிப்­ப­டை­யிலும் மக்­களின் நம்­பிக்­கைக்கு உரிய முறை­யிலும் இப்­ப­த­விகள் முத­ல­மைச்­ச­ரினால் வழங்­கப்­பட்­டி­ருக்கக் கூடும் என்­பதை நாம் மனம் கொள்ள வேண்டும்.எனவே கூட்­ட­மைப்­புக்குள் இருக்­கின்­ற­வர்கள் பத­விக்­கா­கவோ அதி­கா­ரத்­துக்­கா­கவோ போட்டி போடு­வ­தையும் ஒரு­வ­ரை­யொ­ருவர் விமர்­சிப்­ப­தையும் விட்­டொ­ழித்து எமது இலக்­கையும் மக்­களின் அபி­லா­ஷை­க­ளையும் நிறை­வேற்ற ஒன்­று­பட்டு நில்­லுங்கள் என மக்கள் சார்­பாக வேண்டிக் கொள்­கின்றேன்.

இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையைத் தவிர்த்துக் கொள்­வ­தற்­காக கூட்­ட­மைப்­புக்குள் அங்கம் பெறும் ஐந்து கட்­சி­க­ளையும் ஒன்று சேர்த்த முறையில் பதிய வேண்­டு­மென்ற கனவைக் கண்­டு­கொண்­டி­ருக்­கிறோம். அதற்கு எல்­லோரும் விட்டுக் கொடுத்து நடக்க வேண்­டு­மென்­பதே எமது எதிர்­பார்ப்­பாகும். விட்­டுக்­கொ­டுக்கும் மனப்­பான்மை தான் ஒற்­று­மை­யையும் தமி­ழர்­க­ளுக்­கான உரி­மை­யையும் தீர்­வையும் பெற்றுத் தர­மு­டியும்.எனவே தனித்­துவ சிந்­த­னை­களை மறந்து பொதுச் சிந்­த­னையை வளர்க்க தனி தன்­மையை விட்டு பொது­நன்­மையை வென்­றெ­டுக்க ஒவ்­வொ­ரு­வரும் உழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.htmlhttp://www.jvpnews.com/srilanka/50716.html

0 கருத்துக்கள் :