அடுத்தவாரம் புதுடெல்லி செல்கிறார் கோத்தா

27.10.13

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அடுத்தவாரம் இந்தியாவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக, இந்தியப் பிரதமர் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி வரும், கோத்தாபய ராஜபக்சவிடம், தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும், கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால், இந்தியாவே தனிமைப்படுத்தப்படும் என்று சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரிய வசம் தெரிவித்த கருத்துக்கும் இந்திய அரசாங்கம் கண்டனம் தெரிவிக்கவுள்ளது.

இந்தத் தகவலை பிரதமர் செயலகத்துக்கான மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
எனினும் கோத்தாபய ராஜபக்ச எதற்காக புதுடெல்லிக்கு வருகிறார் என்று அவர் கூறவில்லை.

0 கருத்துக்கள் :