காமன்வெல்த் மாநாட்டில் மன்மோகன் சிங் பங்கேற்ற கூடாது: கே.வி.தங்கபாலு

27.10.13

தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு வலியுறுத்தியுள்ளார்.

சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐ.என்.டி.யூ.சியின் தமிழ்நாடு மின்வாரியத் தொழிலாளர் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தின் வெள்ளி விழாவில் கலந்து கொண்ட பிறகு,

செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு மேலும் கூறியதாவது.

தமிழக மக்களின் உணர்வை புரிந்து கொண்டு இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க கூடாது. வெளியுரவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என தெரிவித்துள்ளார். பிரதமர் மட்டுமே இறுதியான முடிவை எடுப்பார். கடந்த வாரம் தில்லி சென்று தமிழக மக்களின் உணர்வுகளை பிரதமரிடம் எடுத்துக் கூறியுள்ளோம். இலங்கை அதிபர் ராஜபட்சே, ராஜிவ்காந்தி ஜெயவர்தனே ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்தவில்லை.
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ஆட்சி, அரசியல், காவல்துறை உள்ளிட்ட அடிப்படை சுதந்திரத்தை வழங்கவேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்களின் வீடு மற்றும் நிலங்களை மறுசீரமைக்க இந்தியா கொடுத்த தொகையை முறையாக ராஜபட்சே அரசு பயன்படுத்தவேண்டும்.

நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அகில இந்திய செயலாளர் சின்னா ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாடு விவகாரம் குறித்து பிரதமர் இறுதி முடிவு எடுப்பார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸþக்கு வெற்றி உறுதி. பாஜக குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு நகரப் பகுதியில் மட்டும் ஆதரவு இருப்பது போன்ற மாயை உள்ளது. காங்கிரஸ் அரசின் நலத்திட்டங்கள் கிராமப் பகுதிகளில் உள்ள அடித்தட்டு மக்களிடம் சென்று சேருகின்றன. ஆகையால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு வரும் தேர்தலில் வெற்றி உறுதியாகியுள்ளது என்றார் சின்னா ரெட்டி.

0 கருத்துக்கள் :