மொரிஷியஸ் நாட்டில் நடைபெறும் புலம்பெயர்ந்த தமிழர் மாநாடு

29.10.13

ஈழத் தமிழர் போராட்டதிற்கு பல காலகட்டங்களில் குரல் கொடுத்தும் ஈழத் தமிழரின் போராட்டத்தை தமிழ் இனத்தின் விடுதலைக்கான போராட்டமாக நினைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மொரிஷியஸ் தமிழர்கள்.

 பல நூறு வருடங்களுக்கு முதல் பிரித்தாணிய காலனித்துவ காலத்தில,; அடிமை ஒழிப்புக்கு பின் காலனித்துவ நாடுகளுக்கு தொழிலாளர்களாக வேலை செய்வதற்கு தமிழர்களின் பூர்வீக நாடுகளாகிய இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து தமிழ் மக்கள் தொழிலாளர்களாக புலம் பெயர்க்கப்பட்டார்கள்.

அவ்வாறு புலம் பெயர்க்கப்பட்ட தமிழ் மக்கள் காலனித்துவ நாடுகளின் அபிவிருத்திக்கு முக்கியமாக இருந்தார்கள். இவ்வாறு புலம் பெயர்ந்த மக்கள் இன்று பிஜி தீவுகள் தொடக்கம் மஇந்திய பெருங்கடல், ஆபிரிக்கா, கரிபியன் தீவுகள் என்று உலகு முழுவதும் வாழ்கிறார்கள். அத்துடன் நின்று விடாமல் தமிழர்களின் இராச்சியங்களை அழித்து அவர்களை தமது நாட்டுக்குள்ளேயே சிறுபான்மையினர் ஆக்கி, பறிக்கப்பட்ட இறைமையை பாதுகாக்க நடந்த போராட்டத்தின் காரணமாக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஒரு பக்கம் வாழ்கிறார்கள்.

 தமிழ் மொழி, கலை, கலாச்சாரம், தமிழர்களின் தாயக மண்ணில் அழிந்து கொண்டிருக்கிறது. இன்று தமிழர்கள் வாழாத நாடில்லை, தமிழர்களிற்கென்றொரு நாடுமில்லாததால் தமிழினம் அழிந்துகொண்டிருக்கிறது.

இன்று உலகில் இந்தியா மற்றும் சிறிலங்காவை தவீர்த்து கிட்டத்தட்ட 2 கோடி தமிழர்கள் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதே போல் இந்தியா மற்றும் சிறி லங்காவில் 8 கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள். அழிந்தது போதும், தமிழர்கள் மீண்டு எழவேண்டும், தமிழர்கள் இறைமையுள்ள மக்கள். தமிழர்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும், உலகத்த்தில் உயிர்ப்புடன் இருக்கும் 6 மொழிகளில் ஒன்றான, தமிழ் மொழி, கலை, கலாச்சாரம், பண்பாட்டு அடையாளங்கள் பாதுகாக்கப்படவேண்டும்.

 தமிழ் மக்களிற்ளுக்குரிய வாழ்வியல் நலன்கள் மேன்மைப் படுத்தப்பட வேண்டும். தமிழ் மக்களுக்குரிய அரசியல் பிரதிநிதித்துவம் ஐக்கிய நாடுகள் சபையில் வழங்கப்படவேண்டும். தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலம் அவர்களிடம் மீளளிக்கப்படவேண்டும்.

 தமிழீழம் தமிழ்நாடு உட்பட உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து மொரிசியஸ் நாட்டில் அனைத்துலக ஈழத்தமிழர் அவையின் அனுசரணையுடன் மொரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பு இந்த மாநாட்டை ஒழுங்கு செய்து நடாத்துகிறது. நவம்பர் மாதம் 8-9-10 ஆம் திகதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டிற்க்கு அந்நாட்டில் இருக்கும் அனைத்து தமிழ் அமைப்புகளும், வேற்று அமைப்புகளும் தமது ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள்.

 இந்த மாநாட்டில் பங்கு பற்றுவதற்க்காக ஐந்து கண்டங்களில் இருந்தும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள், ஆய்வாளர்கள் பங்கு பற்றுகிறார்கள்;. உலகத் தமிழ் மக்களை ஒருங்கிணைப்போம், தமிழர் நிலம் மீட்போம், தமிழர் உரிமை காப்போம், எமது விடுதலை தமிழ் மொழி பேசும், அனைத்து மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்றைய உலக சூழலில், உலகமயப்படுத்தலில், தேசிய இனங்கள் அழிக்கப்படும் நேரத்தில், தமிழ் இனத்தை பாதுகாக்க வேண்டிய கடமை உலகத் தமிழர் கையில் கையளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் இதே திகதிகளில் ஈழத் தமிழர்களின் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு தமிழர்;களுக்கு திருப்பு முனையாக இருக்கப்போகிறது. அதே காலப்பகுதியில் மொரிஷியஸ் நாட்டில் நடைபெறும் 'புலம்பெயர்ந்த தமிழர் மாநாடு, தமிழர் வரலற்றில் திருப்பு முனையாக இருக்கப்போகிறது. -

அனைத்துலக ஈழத்தமிழர் அவை


0 கருத்துக்கள் :