நல்லூர் கிட்டு பூங்காவையும் அபகரிக்க இராணுவம் முயற்சி

25.10.13

நல்லூரில் உள்ள கிட்டு பூங்காவையும், நிரந்தர இராணுவ முகாம் அமைப்பதற்கு வழங்குமாறு இராணுவத்தினர் நல்லூர் பிரதேச செயலகத்திடம் கோரியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளங்கள், தளபதிகளின் வீடுகள், நினைவுச் சின்னங்கள் என்பவற்றைக் கையகப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக, சுவீகரிப்பு நடவடிக்கைகள் யாழ். குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு நிலையில் பருத்தித்துறை வீதியில், நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள 8 பரப்பு விஸ்தீரணம் கொண்ட கிட்டு பூங்காவை இராணுவ முகாம் அமைப்பதற்குக் கையளிக்குமாறு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சினால் நல்லூர் பிரதேச செயலகத்துக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

  தற்போது குறித்த காணியில் யாழ்.மாநகர சபையினால் நவீன பூங்கா ஒன்று அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியிலுள்ள யாழ். மாநகர சபையே இதனை நிர்வகித்து வருகிறது.

இவ்வாறானதொரு நிலையில் இராணுவத்தின் 27ஆவது அணியினருக்குக் கிட்டு பூங்காவை வழங்குவது தொடர்பில் யாழ். மாநகர சபையின் அபிப்பிராயத்தை நல்லூர் பிரதேச செயலகம் கோரியுள்ளது.

0 கருத்துக்கள் :