யாழ்.மருதனார்மடத்தில் கைக்குண்டு மீட்பு!

7.10.13

மருதனார்மடம் சந்தியில் உள்ள கடையின் முன் இருந்து வெடிக்காத நிலையில் இன்று காலையில் கைக்குண்டொன்று  இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை வீதியில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள கடைப் பகுதியின் வாசலில் வைக்கப்பட்டு இருந்த குறித்த கைக்குண்டு  இன்று காலை கடையை திறக்க சென்ற வேளையில்  கடை உரிமையாளரினால்  கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினரான எஸ்ஹரிகரன் என்பவருடைய கடை வாசலில் இருந்து இந்த கைக்குண்டு மீட்க்கப்படடுள்ளது.

இதே வேளை குறித்த கடையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு கடை உடைக்கப்பட்டு சுமார் ஒரு லட்சம் ரூபா பெறமதியான பொருட்கள் உட்பட பணமும் திருடப்பட்டு பொலிசார் விசாரனைகளை மேற்க்கொண்டு வரும் நிலையில் இரண்டாம் நாள் இந்த கைக்குண்டு குறிப்பிட்ட கடை வாயிலில் வைக்கப்பட்டுள்ளமை பலத்த சந்தேகத்தை எற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸார் தொடர்ந்து விசாரனைகளை மேற்க்கொள்வதுடன் உடுவிலில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் கைக்குண்டை மீட்டுச்சென்றுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :