முல்லைத்தீவில் தயாரிக்கப்படும் ‘‘வெள்ளைவான்” திரைப்படம்

22.10.13

முல்லைத்தீவில் அண்மையில் நடைபெற்ற தமிழ் சாகித்திய விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த லீனா மணிமேகலார் என்பவர்  ”வெள்ளை வான்”  என்ற தலைப்பில் குறுந்திரைப்படம் ஒன்றினைத் தயாரிப்பதற்காக ஒளிப்பதிவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 
முல்லைத்தீவு, தமிழ் சாகித்திய விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த லீனா மணிமேகலார் என்பவர் புலிகள் இயக்க ஆதரவாளர் என தெரிவிக்கப்படுகிறது.
இவர் இலங்கை அரசுக்கு எதிராக ”வெள்ளை வான்” என்ற தலைப்பில் குறுந்திரைப்படம் ஒன்றினைத் தயாரிப்பதற்காக ஒளிப்பதிவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை தொடர்பில் அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என திவயின தெரவித்துள்ளது.
இவரால் தயாரிக்கப்படவுள்ள ”வெள்ளை வான்” என்ற குறுந்திரைப்படம் தமிழர்களைக் கடத்திச் செல்வது தொடர்பிலானதாகும்.
அத்துடன், சாகித்திய விழாவுக்கென  இலங்கைக்கு வந்து முல்லைத்தீவு சென்றிருந்த லீனா மணிமேகலார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற பிரதேசங்களுக்கும் சென்றிருந்தார்.
வரும் நவம்பர்மாதம் கொழும்பில் பொதுநலவாய நாடுகள் மகாநாடு நடைபெறவுள்ள நிலையில், இலங்கை அரசைக் சங்கடப்படுத்தும் வகையிலேயே அவர் இந்தக் குறுந் திரைப்படத்தை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார் என்றும் திவயின தெரிவித்துள்ளது.

0 கருத்துக்கள் :