துப்பாக்கி சுடும் வீரர் சுட்டுக்கொலை

21.10.13

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தாய்லாந்து துப்பாக்கி சுடும் வீரர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தாய்லாந்தைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர் ஜக்ரிட் பனிச்ப படிகம் (40). இவர் தாய்லாந்து சார்பில் ஒலிம்பிக் போட்டியில் 2 தடவை பங்கேற்றுள்ளார். அதில் வென்று பதக்கமும் பெற்றுள்ளார்.
நேற்று முன்தினம் இவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது இவரை மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த 2 மர்ம மனிதர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனால் உடலில் குண்டு பாய்ந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

அவரை சுட்டு கொன்றது யார் என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜக்ரிட் தனது மனைவியை பிரிந்து வாழ்கிறார். இவர்களுக்கு இடையே சுமூகமான உறவு இல்லை. இப்பிரச்சினையால் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

0 கருத்துக்கள் :