முள்ளிவாய்க்கால் போர்களமாக தஞ்சை நினைவுமுற்றம். காசியானந்தன்!

19.10.13

தமிழீழ மண்ணில் விடுதலைப்புலிகள் நடத்திய வீரம்செறிந்த அந்த விடுதலை போர் அவர்களின் மாவீரத்தினை முள்ளிவாய்க்கால் நினைவிற்கு கொண்டுவருகின்றது தமிழர்களின் மண்விடுதலை உணர்வினையும் சிங்களத்தின் இனவெறியினையும் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கொண்டுவருகின்றது.

இனிய தமிழ்நெஞ்சங்களே நவம்பர் திங்கள் 8 9 10 ஆகிய நாட்களில் தஞ்சையில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவில் அனைத்து தமிழ்மக்களும் கலந்துகொள்ளவேண்டும் என்ற பணிவுடன் வேண்டுகின்றேன். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தமிழீழ மக்களின் விடுதலை போராட்டத்தை நினைவிற்கு கொண்டுவரும் நிலையான நினைவு சின்னம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது .

முள்ளிவாய்க்காலில் வீறுகொண்டெழுந்த விடுதலைப்புலிகளின் போர் தமிழீழ மக்களின் அந்த போர் உலகவிடுதலையாளர்களின் அந்த போர் நம் நினைவிற்கு வருகின்றது முள்ளிவாய்க்கால் ஐந்து முதன்மையான நினைவுகளை நமக்கு தருகிறது. சிங்களவர்களின் கொடுங்கோண்மையினை நினைவிற்கு வருகின்றது.
சிங்களத்தின் இனவெறியின் கீழ் துடித்து துன்புற்று மடிகின்ற தமிழீழ மக்களின் அவர்களின் அவலத்தின் சாவினை முள்ளிவாய்க்கால் நினைவிற்கு கொண்டுவருகின்றது .
 தமிழீழ மண்ணில் விடுதலைப்புலிகள் நடத்திய வீரம்செறிந்த அந்த விடுதலை போர் அவர்களின் மாவீரத்தினை முள்ளிவாய்க்கால் நினைவிற்கு கொண்டுவருகின்றது.

 தமிழர்களின் மண்விடுதலை உணர்வினை அந்த முள்ளிவாய்க்கால் நாள் நினைவிற்கு வருகின்றது முள்ளிவாய்க்கால் உலகினை ஈர்த்த ஒருமாபெரும் போராக உலக விடுதலைபோராட்ட வரலாற்றில் நிலைத்து நிற்பதை நாம் பாக்கின்றோம். எங்கள் தலைவர் முள்ளிவாய்க்காலில் மூட்டிய மிகப்பெரிய விடுதலை நெருப்பு உலகமெங்கும்பற்றி பாய்கின்றது.
 முள்ளிவாய்க்காலை நினைவாக கொண்டு தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைகின்றது. இன்னொரு முள்ளிவாய்க்கால் போர்களமாக தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைகிறது.

 உலகில் எந்த நாட்டில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் தஞ்சைக்கு வந்து தமிழீழத்தில் நடந்த வீரமிக்க விடுதலை போரினை விடுதலை உணர்வினை சிங்களவனின் இனவெறியினை பார்க்கின்ற இடமாக சிற்பகாட்சியாக இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைகின்றது .

 அங்கு வெறும் கற்சிற்பங்கள் அல்ல அவை முள்ளிவாக்காலில் நிகழ்ந்த போரின் வாழ்க்கை சிற்பங்கள் இந்த முள்ளிவாய்க்கால்நினைவு முற்ற திறப்பு நிகழ்வில் அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறும் உணர்ச்சி கவிஞர் காசியானந்தன் தெரிவித்துள்ளார்.


0 கருத்துக்கள் :