கல்லூரி பேராசிரியை அடித்துக்கொலை

18.10.13

திருப்போரூர் அருகே பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தையூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் எஸ்சிபாய் (வயது 59). இவருடைய கணவர் ஜெயகுமார் ஏற்கனவே இறந்து விட்டார். எஸ்சிபாய், பாளையங்கோட்டை சாராள்தக்கர் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி, வேலையை ராஜினாமா செய்தவர்.

அவருடைய மகன் கிப்ட்சன் (24) மறைமலைநகர் மகேந்திராசிட்டியில் பணியாற்றி வருகிறார். எஸ்சிபாய், வீட்டில் தனியாக இருந்தார். நேற்று இரவு 8.30 மணிக்கு மேல் கிப்ட்சன், வேலை முடிந்து வந்தபோது, வீடு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அவருடைய தாய் எஸ்சிபாய் இறந்து கிடந்தார்.

 அவர் சுவற்றில் தலையை மோதி கொல்லப்பட்டு இருந்தார். கழுத்து நெரிக்கப்பட்டு இருந்தது. அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க வளையல்களும், 5 பவுன் தங்க சங்கிலியும், வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கமும் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தன.

இதுபற்றி தகவல் அறிந்ததும், மாமல்லபுரம் டி.எஸ்.பி. மோகன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

0 கருத்துக்கள் :