பல்வழியே பார்க்கும் பிரித்தானியாவின் அபூர்வ மனிதர்

7.10.13

பிரித்தானியாவில் கண்ணில் அடி­பட்டு பார்வை பறி­போன ஒரு­வ­ருக்கு பல்­வ­ழியே உல­கத்தை பார்க்கும் அதி­சயம் நிகழ்ந்­துள்­ளது.

1998ஆ-ம் ஆண்டு பிரித்தானியாவில் உள்ள தொழிற்­சாலை ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் இயன் டிபெட்ஸ் (43) என்ற தொழி­லா­ளியின் வலது கண்ணில் இரும்புத் துண்டு பாய்ந்­தது. அடி­பட்ட கண்ணில் அடிக்­கடி வலி­யுடன் நீர் வடியும் நிலையில் அவர் மிகவும் அவ­திப்­பட்டு வந்தார். நாள­டைவில், அந்த கண்ணின் பார்வை சுத்­த­மாகப் பறி­போ­னது.

இதனால் அவர் வேலையை விட்டு நிற்க வேண்­டிய பரி­தாப சூழ்­நிலை ஏற்­பட்­டது. அவ­ரது இடது கண்ணின் பார்­வையும் ஓரிரு ஆண்டில் பறி­போ­னதால், உல­கமே இருண்ட நிலையில் சூன்யப் பிர­தே­சத்தில் வசிக்க வேண்­டிய நிலைக்கு அவர் தள்­ளப்­பட்டார்.

 புரட்­சி­க­ர­மான ஓர் அறுவை சிகிச்­சையின் மூலம் இயான் டிபெட்­சுக்கு மீண்டும் கண்­ணொ­ளியை ஏற்­ப­டுத்தபிரித்தானியாவில் உள்ள சசெக்ஸ் கண் வைத்­தி­ய­சாலை பேரா­சி­ரியர் கிரிஸ்­டோபர் லியு முடிவு செய்தார். இதன்­படி, அவ­ரது தாடையின் ஒரு பகு­தி­யையும், முன் பல்­வ­ரி­சையில் ஒன்­றையும் வைத்­தி­யர்கள் அகற்­றினர். தாடையை தொட்­டி­லாக்கி, அதில் பல்லை இணைத்து அவ­ரது கன்னப் பகு­தியில் பொருத்தி விட்­டனர்.

அந்தப் பல்லில் அதி­ந­வீன ெகாண்டக்ட் விழி­வெண்­ப­ட­லத்தை இணைத்து 3 மாதங்­க­ளுக்கு அப்­ப­டியே விடப்­பட்­டது. இதற்­கி­டைப்­பட்ட காலத்தில் அந்த புதிய இணைப்பில் திசுக்­களும் இரத்த நாளங்­களும் வளரத் தொடங்­கின. அதை அப்­ப­டியே மொத்­த­மாக எடுத்து அவ­ரது வலது கண்­ணுக்குள் திணித்து, மூளைக்கு செல்லும் நரம்பு மண்­ட­லத்­திற்கு இணைப்பு வழங்­கப்­பட்­டது.

இந்த நவீன அறுவை சிகிச்சை நடந்த சில வாரங்­களில் கண்­ணொளி திரும்பப் பெற்று பழைய மனி­த­ராக இயான் டிபெட்ஸ் தற்­போது நட­மாடத் தொடங்கி விட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :