இது கொண்டாடுவதற்கான நேரமில்லை”விழாவை நிராகரித்த விக்னேஸ்வரன்

6.10.13

வடக்கு மாகாண முதல்வராக நாளை பதவியேற்கவுள்ள, சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பில் தனக்கு நடத்தவிருந்த வரவேற்பு விழாவை நிராகரித்துள்ளார். நாளை வடக்கு மாகாண முதல்வராக பதவியேற்ற பின்னர், கொழும்பில் அவருக்கு முறைப்படியான வரவேற்பு விழா ஒன்றை நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டன. ஆனால், இந்த விழாவை அவர் நிராகரித்து விட்டதாக, இந்து கல்வி சமூகத்தின் செயலர் கந்தையா நீலகண்டன் தெரிவித்துள்ளார். தனது தெரிவை கொண்டாட வேண்டிய தேவையில்லை என்றும், இது கொண்டாட்டம் நடத்துவதற்கு உகந்த நேரம் இல்லை என்றும், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், விழா அமைப்பாளர்களிடம் தெரிவித்துள்ளார். அத்துடன், பதவியேற்பு முடிந்தவுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக தாம் உடனடியாக யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

0 கருத்துக்கள் :