இலங்கையின் ஜனநாயகம் மௌனிக்கிறது.ஆசிய மனித உரிமைகள் ஆணையகம்

11.10.13

இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையை ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் கண்டித்துள்ளது.
பொதுநலவாய மாநாடு நடைபெற்று முடிந்துள்ள காலப்பகுதியில் எந்த நாடுகளிலும் இவ்வாறான கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கவில்லை என்று ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் அமர்வு கொழும்பில் நடைபெறுவதை முன்னிட்டு கொழும்பில் அதிகப்பட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
பொலிஸாருக்கும் படையினருக்கும் அதிக அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையிலேயே ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் தமது கருத்தை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் இலங்கையின் ஜனநாயகம் மௌனிக்க செய்யப்படுகிறது என்று ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

0 கருத்துக்கள் :