ஈராக்கில் தொடர் கார் குண்டு தாக்குதல்: 54 பேர் பலி

27.10.13

ஈராக்கில் ஷியா பிரதமர் மாலிக் அரசிற்கு எதிராக சன்னி பிரிவு போராளிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பிரதமர் மாலிக் சன்னி முஸ்லிம்களை புறக்கணிப்பதாகக்கூறி வரும் சன்னி போராளிகள் அல்-கொய்தா துணையுடன் ஈராக்கில் ஷியா பிரிவினரின் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருவதாக அரசு குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில், இன்று பாக்தாத் மாகாணத்தின் 10 இடங்களில் பெரும்பான்மையாக ஷியா முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் கார் குண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் குறைந்தது 54 பேர் கொல்லப்பட்டனர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த மாதத்தில் மட்டும் 600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மோதல்களால் பாராளுமன்றம் முற்றிலும் முடங்கிப்போயுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு நடந்த பிரிவினை வாத சண்டையை காட்டிலும் இப்போது அதிகப்படியான தாக்குதல் நடந்து வருவதால், அங்கு பிரிவினைவாத மோதல் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.

0 கருத்துக்கள் :