பெரு நாட்டில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து 51 பேர் பலி

14.10.13

தென் அமெரிக்காவில் உள்ள பெருநாட்டில் தென்கிழக்கில் இருந்து லா கன்வென்சியின் மாகாணம் உள்ளது. அது மலைகளால் ஆன பகுதி.

இம்மாகாண தலைநகர் சந்தா தெரசாவில் இருந்து பஸ் புறப்பட்டு சென்றது. இதில் 52 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 13 பேர் குழந்தைகள்.

அந்த பஸ் 650 அடி உயர மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த பள்ளத்தாக்கில் ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் கவிழ்ந்தது.

இச்சம்பவத்தில் பஸ்சில் பயணம் செய்த 52 பேரும் பலியாகினர். இத்தகவலை லா கன்வென்சியின் மாகாண மேயர் தெரிவித்தார்

0 கருத்துக்கள் :