46 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த நுளம்பும் இரத்தமும் கண்டுபிடிப்பு.

15.10.13

46 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த நுளம்பு ஒன்று நன்கு பாதுகாக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவின் மொன்டனா மாநிலத்தில் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நுளம்பின் வயிற்றிருந்து இதுவரையில் அறியப்பட்ட உலகின் மிகப் பழைமையான இரத்தம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 நம்பமுடியாதவொரு கண்டுபிடிப்பு என கலாநிதி டேல் க்ரீன்வோல்ட் தெரிவித்துள்ளார்.

 குறித்த நுளம்பானது இரத்தத்தினை உணவாக எடுத்துகொண்ட பின்னர் இறந்து சேறான பகுதியில் சிக்கியமையினால் இதன் எச்சங்கள் நன்கு பாதுகாப்பான நிலையில் இத்தனை ஆண்டுகள் இருந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துக்கள் :