ஆற்றுக்குள் விமானம் பாய்ந்து 44 பேர் பலி

16.10.13

தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமின் தலைநகர் லாவோசில் இன்று லாவோஸ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

 தலைநகர் லாவோசிலிருந்து தெற்குப்பகுதியில் உள்ள வியென்சியானுக்கு அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சில நிமிடங்களில் அருகிலிருந்த மெகாங் ஆற்றில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.

இன்று மதியம் நடந்த அந்த விமானம் விபத்து குறித்து வியட்நாமில் இருந்து எந்த செய்தியும் இல்லை. இருந்தும் பக்கத்து நாடான தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம், வியட்நாம் விமான விபத்தில் 44 பேர் இறந்ததாக கூறியுள்ளது.

 இந்த விபத்து குறித்து சீனாவின் ஜின்குவா செய்தி நிறுவனமும் செய்தி வெளியிட்டுள்ளது

0 கருத்துக்கள் :