4 வயது சிறுமியை நாசம் செய்த 30 வயது உறவினருக்கு தர்ம அடி

13.10.13

ராஜஸ்தானில் உள்ள சவானி ராமசந்திரபுராவில் தாத்தா பாட்டியுடன் வசித்துவந்த 4 வயது சிறுமியை அவரது உறவினர் ரஞ்சித் வால்மிகி என்பவர் நேற்று அழைத்துசென்றுள்ளான்.
 4 குழந்தைக்கு தகப்பனான 30 வயது ரஞ்சித் வால்மிகி அந்த சிறுமிக்கு சாக்லேட் வாங்கிக்கொடுத்து அருகிலுள்ள கல்லூரி விளையாட்டு மைதானத்திற்குள் அழைத்துச்சென்று இருக்கிறான். பின்னர் அங்கிருந்த புதர் மறைவில் அந்த சிறுமியை பாலியியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறான்.

அப்போது அழுத அந்த சிறுமியை, அவன் அடித்தும் இருக்கிறான். அவள் அழுகுறல் அருகாமையில் சென்றுக்கொண்டிருந்த வழிப்போக்கர்களுக்கு கேட்க அருகில் வந்து பார்த்து இருக்கின்றனர். உடனே அவனை கையும் களவுமுமாக பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அவன் மீது சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டப்படி வழக்கு பதிந்த போலீசார் அப்பகுதி நீதிமன்றத்தில் நேற்று அவனை ஆஜர் படுத்தினர். பாலியல் கொடுமைக்கு ஆளான சிறுமியின் பெற்றோர்கள் வறுமை காரணமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தினக்கூலியாக வேலைபார்த்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

0 கருத்துக்கள் :