யாழ்ப்பாண நிருபர் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட நாள்(அக். 19-2000)

18.10.13

மயில்வாகனம் நிமலராஜன் யாழ்ப்பாணத்தை தளமாக்க கொண்டு இயங்கிய முன்னணி ஊடகவியலாளர் ஆவார். 2000 அக்டோபர் 19 அன்று, இவர் இலங்கை இராணுவத்தின் ஒருவரால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டார்.
கொலையாளிகள் அவரது வீட்டின் ஜன்னல் வழியாக துப்பாக்கியால் சுட்டனர்.

 நிமலராஜன் தான் எழுதிக் கொண்டிருந்த கட்டுரை மேலேயே தனது உயிரை விட்டார். கொலையாளிகள் வீட்டு வளாகத்தை விட்டு வெளியேறும்போது கைகுண்டு ஒன்றை வீட்டுக்குள் வீசி விட்டு சென்றனர். இத்தாக்குதல் யாழ்ப்பாண நகர மத்தியில் அதியுயர் பாதுகாப்பு வலயத்துள் ராணுவ ஊரடங்கு சட்டம் இயங்கும் வேலையில் நடைபெற்றது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
* 1944 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் பிலிப்பைன்சில் தரையிறங்கின. * 1950 - சீன ராணுவம் திபெத்தின் காம்டோ நகரைக் கைப்பற்றினர். * 1954 - சோ ஓயு மலையின் உச்சி முதன் முறையாக எட்டப்பட்டது. * 1960 - ஐக்கிய அமெரிக்க நாடுகள் கம்யூனிசக் கியூபா மீது பொருளாதார தடைகளை விதித்தது. * 1974 - நியுயே நியூசிலாந்திடமிருந்து விடுதலைப் பெற்று சுயாட்சி மண்டலமாகியது. * 1976 - சிம்பன்சி உலகின் அருகி வரும் மிருக இனமாக அறிவிக்கப்பட்டது. * 1983 - கிரெனாடாவில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியை அடுத்து அதன் பிரதமர் மோரிஸ் பிஷொப் படுகொலை செய்யப்பட்டார்.

 * 1986 - மொசாம்பிக் அதிபர் சமோரா மேச்சல் உட்பட 33 பேர் விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டனர். * 1991 - வட இத்தாலியில் ஏற்பட்ட 7.0 ரிக்டர் அளவான நிலநடுக்கம் காரணமாக 2 ஆயிரம் பேர் வரை இறந்தனர். * 2003 - திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அன்னை தெரேசாவை முத்திப்பேறு பெற்றவராக அறிவித்தார். * 2005 - மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக சதாம் உசேனுக்கு எதிரான வழக்குத் தொடங்கியது. * 2009 - தமிழ்நாதம், புதினம் ஆகிய ஈழச்சார்பு இணையத்தளங்கள் நிறுத்தப்பட்டன.

0 கருத்துக்கள் :