மெட்றோ பொலிடன் பொலிசார் தமிழ் கொடி புலிகளின் கொடி

6.9.13

லண்டன் வாழ் தமிழர்கள் மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் அனைவரும் பெருமையாக இருக்கவேண்டிய தருணம் இது. ஏன் எனில் பிரித்தானியா உட்பட பல நாடுகள் புலிகள் இயக்கத்தை தடைசெய்தார்கள்.

 அவர்கள் கொடியை ஒத்த தமிழீழ தேசிய கொடியை புலிகளின் கொடி என்று கூறிவந்தனர். பல போராட்டங்களில் தமிழீழ தேசிய கொடியை, புலிகளின் கொடி என நினைத்து அதனைப் பிடித்தவர்களை பொலிசார் கைதுசெய்தார்கள்.

ஆனால் பிரித்தானியாயில் உள்ள தமிழர்கள் விட்டபாடாக இல்லை. அதனை விட பிரித்தானியாவில் செயல்பட்டு வரும் மக்கள் அமைப்பான பிரித்தானிய தமிழர் பேரவையினர்(BTF) இதனை சாதித்து முடித்துள்ளார்கள்.

 அவர்கள் கடினமாக பாடுபட்டு, ஆதாரங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களைக் காட்டி, பல ஆவணங்களை தயாரித்து பொலிசாரிடம் கொடுத்துள்ளார்கள். இதனால் தற்போது தமிழ் மொழிக்கு, ஒரு இலச்சினை கிடைத்துள்ளது.
 தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாடு இல்லை ! உலகம் எல்லாம் வாழும் தமிழர்கள் 2ம் தர குடிகளாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

0 கருத்துக்கள் :