உல்லாசத்துக்கு மறுத்த கள்ளக்காதலியை கல்லை தூக்கிபோட்டு கொன்ற காதலன்

27.9.13

உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலியை கல்லை தூக்கி போட்டு கொன்ற சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி புதுதாராபுரம் ரோட்டில் புளியம்பட்டியில் இருந்து பொருளூர் செல்லும் வழியில் உள்ள பெரியகரடு பகுதியில் சுமார் 30 முதல் 35 வயது மதித்தக்தக்க பெண் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து கீரனூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜானகிராம் மேற்பார்வையில் கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன், சப்–இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், கோபால கிருஷ்ணன், தெய்வ வள்ளி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் கொலை செய்யப்பட்ட பெண் யார்? பெயர் விபரம் என்ன? கொலை நடந்ததற்கான காரணம் என்ன என குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். அவருடன் வேலை பார்த்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சம்வத்தன்று இருவரும் பெரியகரடு பகுதியில் மது குடித்துள்ளனர்.

 போதை தலைக்கு ஏறியதால் அந்த வாலிபர் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் கொலையுண்ட பெண் மறுத்ததால் அருகே கிடந்த பாறாங்கல்லை தூக்கி தலையில் போட்டு அவரை கொன்றுவிட்டு காதலன் தப்பி ஓடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து போலீசார் கொலை செய்யப்பட்ட பெண் மற்றும் அவரது காதலன் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பழனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துக்கள் :