வாழைச்சேனையில் விடுதலை புலிகளின் வீடியோ வைத்திருந்த நபர் கைது

30.9.13

மட்டக்களப்பு, கல்குடாப் பொலிஸ் பிரிவில் தமிழீழ விடுதலை புலிகளின் வீடியோ காட்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாசிக்குடா யானைக்கல் கடற்கரைப் பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மேற்படி இளைஞனை கைது செய்துள்ளனர்.
பொலிஸாரைக் கண்டு ஓடிய இளைஞனை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளதுடன் கையடக்கத் தொலைபேசியையும் சோதனை செய்துள்ளனர்.
இதன்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் வீடியோக் காட்சிகளை இளைஞன் தனது கையடக்கத் தொலைபேசியில் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேத்தாளை விஷ்னு கோவில் வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி இளைஞனிடம் கல்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துக்கள் :