யாழ்.சிறுப்பிட்டியில் அரசாங்க கட்சியினர் காடைத்தனம்

15.9.13

யாழ்.சிறுப்பிட்டிப் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தினை ஓழுங்குபடுத்தியவர்களுடைய வீட்டிற்குள் புகுந்த சிறிலங்கா அரசாங்க கட்சியினர் காடைத்தனம் புரிந்துள்ளனர்.

 அத்துடன் குறித்த நபருடைய வீட்டின் பின்புறமாக இருந்த தோட்டத்தில் நின்ற பயிர்களையும் வெட்டி எறிந்து நாசம் செய்துள்ளனர். யாழ்.சிறுப்பிட்டிப் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று இரவு இடம்பெற்றது.

 இக் கூட்டத்தில் பெரும்பாலான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த சிறிலங்கா அரச கட்சியினர் குறித்த பிரச்சாரக் கூட்டத்தினை ஒழுங்குபடுத்தியவருடைய வீட்டிற்குள் புகுந்த காடைத்தனம் புரிந்துள்ளனர்.

மேலும் வீட்டின் பின்புறமாக இருந்த வாளைத் தோட்டத்தினை வெட்டி எறிந்து நாசம் செய்துள்ளனர். இதனையடுத்து இன்று ஞாயிற்றுக் கிழமை காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் சம்பவ இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டார்.

மேற்படி காடைத்தனத்தினை வடக்குமாகாணசபைத் தேர்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு சிறிலங்கா இராணுவத்தினர் சிபார்சில் வேட்பாளராக்கப்பட்ட சிராஸ் என்பவருடைய ஆதரவாளர்களே இச் சம்பவம்தினை புரிந்துள்ளனர் என்று அப்பகுதி மக்கள் தனக்குத் தெரிவித்துள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
0 கருத்துக்கள் :