போப் இலங்கை வருவது உறுதி

6.9.13

போப் பிரான்சிஸ் இலங்கைக்கு வருகிறார் என்பதை கொழும்பு ஆயர் அலுவலகம் உறுதிப்படுத்தியிருக்கிறது.
இந்த ஆண்டு முன்னதாக இலங்கை ஜனாதிபதி புதிய போப்பை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருப்பதாக ஜனாதிபதி அலுவலகம் கூறியிருந்தது.

கொழும்பு ஆயருக்காகப் பேசவல்ல அருட்தந்தை பெனெடிக்ட் ஜோசப், பிபிசி தெரிவித்திருந்த செய்தியிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

திருத்தந்தை இலங்கைக்கு வருகிறார் என்பதை வத்திக்கான் உறுதிப்படுத்தியிருக்கிறது. இது வரை எங்களுக்கு அவர் விஜயம் குறித்த நாட்கள் அல்லது வேறு விவரங்கள் தரப்படவில்லை. அவர் வருகிறார் என்பது அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை மட்டும்தான் என்னால் சொல்ல முடியும்.

அவரது விஜயம் குறித்த மேல் விபரங்களை நாங்கள் விவாதித்துக்கொண்டிருக்கிறோம். இந்த விஜயம் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் நடக்கிறதா என்பதையும் என்னால் சொல்ல முடியாது. இந்த விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை",என்றார்.

1970ல் அப்போதைய போப் , பிலிப்பைன்ஸ் செல்லும் வழியில் , இலங்கையில் இரண்டு மணி நேரங்கள் தங்கியிருந்தார். அதற்குப் பின்னர் 1995இல் போப் ஜான் போல், இலங்கைக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :