மாணவி பாலியல் துஷ்பிரயோக முயற்­சி; அதிபர் சரண்

4.9.13

14 வயது மாண­வி­யொ­ரு­வரை பாட­சா­லையில் வைத்து  பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­த முயன்­ற வென்­னப்­புவ பிர­தே­சத்­தி­லுள்ள பாட­சா­லை­யொன்றின் அதிபர் நேற்று முன்­தினம் 2 ஆம் திகதி  சட்­டத்­த­ர­ணி­யொ­ருவர் ஊடாக வென்­னப்­புவ பொலிஸ் நிலை­யத்தில் சர­ண­டைந்­துள்ளார்.

இரண்டாம் தவணை பாட­சாலை விடு­மு­றையில் பாட­சா­லையில் சிர­ம­தானப் பணி­களை மேற்­கொள்ள வரும்­படி அதிபர் அழைத்­ததன் பேரில் 9 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் சில மாண­விகள் பாட­சா­லைக்கு வந்­துள்­ளனர்.

ஒரு கட்­டி­டத்தின் இரண்டாம் மாடியில் சிர­ம­தா­னத்தில் தனி­யாக ஈடு­பட்­டி­ருந்த மாண­வியை அதிபர் பலாத்­கா­ர­மாக கட்­டி­ய­ணைத்­துள்ளார். மாணவி கூக்­கு­ர­லி­டவே அதிபர் அங்­கி­ருந்து தப்­பி­யோ­டி­யுள்ளார். பின்னர் இது தொடர்­பாக பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.

கடந்த தினங்­களில் தலை­ம­றை­வா­கி­யி­ருந்த 53 வய­தான இந்த  அதிபர் சட்­டத்­த­ர­ணி­யொ­ருவர் மூலம் பொலிஸ் நிலை­யத்தில் சர­ண­டைந்தார். இவரை மாரவில நீதி­வான் நீதிமன்றத்தில் ஆஜர்  செய்ய வென்னப்புவ பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்

0 கருத்துக்கள் :