தாய்க்கு நிகரான நவிப்பிள்ளைக்கு மண அழைப்பு விடுத்தது மாதவறு

5.9.13

"அன்னைக்கு நிகரான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கு திருமண அழைப்பு விடுத்தது மாதவறு. இந்த அநாகரியச் செயலுக்காக அமைச்சரவையின் சார்பில் நான் கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றேன்''

இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் டலஸ் அழகப்பெரும.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அமைச்சர் மேர்வின் சில்வா விடுத்த  திருமண அழைப்பு விவகாரம் குறித்து நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டின் போதும்  கேள்விகள் எழுப்பபட்டன.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கண்டனம் வெளியிட்ட பின்னர்தானே அரசு மன்னிப்புக் கோருகின்றது. இதற்கு முன்னரே கோரியிருக்கலாம் தானே என்றும் ஊடகவிய லாளர்கள் வினவினர்.

"எனது அன்னையை விட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கு இரண்டு வயதுகள்தான் குறைவு. அன்னைக்கு யாராவது திருமண அழைப்பு விடுப்பது தகுமா?  எனவே, அமைச்சரின் கருத்து முற்றிலும் தவறானதாகும். இதற்காக அமைச்சரவையின் சார்பில் நான் கவலையை தெரிவித்துக்கொள்கின்றேன். என்றார்.

0 கருத்துக்கள் :