இலங்கையில் நவனீதம்பிள்ளையை பின் தொடர்ந்த றோ.

8.9.13

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை றோ உளவுப் பிரிவினர் பின் தொடர்ந்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நவனீதம்பிள்ளை இலங்கை விஜயம் செய்திருந்த காலப் பகுதியில் றோ உளவுப் பிரிவினர் அவரது நடவடிக்கைகளை கண்காணித்துள்ளனர்.
பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவினர் இதனை உறுதி செய்துள்ளனர்.
நவனீதம்பிள்ளை இலங்கையில் ஆற்றிய உரைகள் சந்தித்த நபர்கள் பற்றிய தகவல்கள் இவ்வாறு சேகரிக்கப்பட்டுள்ளன.
இலங்கை விஜயம் செய்த தருணம் முதல் நாடு திரும்பும் வரையில் சகல நடவடிக்கைகளையும் றோ உளவுப் பிரிவினர் கண்காணித்துள்ளனர்.
குறிப்பாக வடக்கில் கூடுதலாக றோ உளவுப் பிரிவினர் சஞ்சரித்து தகவல்களை திரட்டியுள்ளனர்.
என்ன காரணத்திற்காக இவ்வாறு நவனீதம்பிள்ளையின் விஜயத்தை கண்காணித்தார்கள் என்பது பற்றி தகவல்கள் வெளியாகவில்லை.
வடக்கு மக்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நவனீதம்பிள்ளை வெளிப்படுத்தியிருக்கக் கூடும் என்ற காரணத்தினால் இவ்வாறு றோ உளவுப் பிரிவினர் கண்காணிப்புக்களை மேற்கெண்டிருக்கலாம் என சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 கருத்துக்கள் :