போட்டியில் இருந்து விலகினாராம் அனந்தி – சிறிலங்கா அரசு கிளப்பியுள்ள புரளி

19.9.13

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் அனந்தி சசிதரன், போட்டியில் இருந்து விலகி விட்டதாக, சிறிலங்கா அரசாங்கம் பொய்யான பரப்புரை ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளரும், போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்த காணாமற் போயுள்ளவருமான, எழிலனின் மனைவியான அனந்தி சசிதரனைத் தோற்கடிக்கும் நோக்கிலேயே சிறிலங்கா அரசாங்கம் இந்த பொய்யான வதந்தியை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

எழிலனைக் கண்டுபிடித்து தருவதாக சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்ததன் பேரிலேயே, அவர் போட்டியில் இருந்து விலகி விட்டதாக, வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
எனினும்,  இவை சிறிலங்கா அரசின் பொய்யான பரப்புரையே என்றும், அவரைத் தோற்கடிப்பதற்காகவே, இந்த வதந்தி கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போதும் சிறிலங்கா அரசாங்கம் இதுபோன்று ஏமாற்று வேலையை மேற்கொண்டிருந்தது.
நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.ருத்திரகுமாரின் அவசர வேண்டுகோளை அடுத்து கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியில் இருந்து விலக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளதாகவும், எனினும், கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்காமல், வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்காது வேறொரு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும், கோரும், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் போலியான கையெழுத்து, மற்றும் படத்துடனான துண்டுப் பிரசுரங்கள், குச்சவெளி பிரதேசத்தில் தேர்தலுக்கு முதல்நாள், இரவு வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது

0 கருத்துக்கள் :