வாக்காளர்கள் ஆளுமையுள்ள வல்லவர்களை தெரிவு செய்ய:மனோ கணேசன்

20.9.13

வாக்குச்சீட்டு எங்கள் ஜனநாயக ஆயுதம். வாக்குரிமை எங்கள் பிறப்புரிமை. வாக்குரிமையுள்ள அனைவரும் வாக்களிப்பில் கலந்துகொண்டு எங்கள் இந்த பிறப்புரிமையை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

அற்ப சொற்ப சலுகைகளுக்காக எமது இந்த பிறப்புரிமையை அடகு வைக்காமல், நாளை வரும் நல்ல காலத்தை எதிர்நோக்கி ஆளுமையுள்ள வல்லவர்களை தெரிவு செய்யும் நோக்கில் நாம் வாக்களிக்க வேண்டும்.

இந்த  நாட்டில் ஒரு இனமாக வாழும் எங்களின் இருப்பு இன்று பெரும் சவால்களை  எதிர்நோக்கியுள்ளது. எம்மை எதிர்நோக்கும் இந்த சவாலை எதிர்கொள்ள எம்மவர்களை அதிலும் ஆளுமையுள்ள வல்லவர்களை நாம் தெரிவு செய்ய வேண்டும்.

இதற்காக நம்வசம் இருக்கும் வாக்குரிமையை அதிகபட்சமாக பயன்படுத்த, வாக்களிப்பு ஆரம்பமாகும் காலை ஏழு மணியளவிலேயே வாக்குசாவடிக்கு சென்று அமைதியாக வாக்களிப்பில் கலந்துகொள்ளுங்கள் என மத்திய, வட மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் வாக்காளர்களை கோருகின்றேன்.
 என மத்திய, வடக்கு மாகாணசபைகளுக்காக நாளை நடைபெறவுள்ள தேர்தல் வாக்களிப்பு தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  

0 கருத்துக்கள் :