சிரியா மீதான தாக்குதலுக்கு சவூதி அரேபியா ஆதரவு

2.9.13

சிரிய அரசாங்கத்துக்கு எதிரான தாக்குதலுக்கு சவூதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது.

சிரிய மக்களுக்கு எதிரான ஆக்ரோஷமான நடவடிக்கைகளை தடுப்பதற்கு உலகம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதற்கான தருணம் இதுவென சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் சௌத் அல் பைஸால் இன்று தெரிவித்துள்ளார்.

அரபு லீக் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டிற்காக கெய்ரோ சென்றுள்ள நிலையிலேயே அமைச்சர் அல் பைஸர் இதனை தெரிவித்தார்.

'சிரிய மக்களுக்கு எதிரான ஆக்ரோஷத்தை தனது அனைத்து வலிமையுடனும் தடுக்குமாறு சர்வதேச சமூகத்தை நாம் கோருகிறோம்' என அவர் கூறினார்.

அமெரிக்காவின் தாக்குதலுக்கான சாத்தியம் குறித்து அவர் கூறுகையில், 'சிரிய மக்களுக்கு ஆதரவாக நாம் நிற்கிறோம்.அவர்கள் ஏற்றுக்கொள்ளும் எதனையும் நாமும் ஏற்போம். அவர்கள் நிராகரிப்பதை நாம் நிராகரிப்போம்' என்றார்.

0 கருத்துக்கள் :