விநாயகர் சிலைகள் விற்பனை அமோகம்

7.9.13

இந்துக்களின் முதன்மைக் கடவுளான விநாயருக்கு பெருவிழா நடக்கிறது என்றால் அது விநாயகர் சதுர்த்தி விழாதான். இந்து மக்களிடம் இந்த விழா கொண்டாட்டங்கள் சமீப காலங்களாக அதிகமாக பெருகி வருகிறது.

 அன்றைய தினம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விநாயகர் சிலை இருக்க வேண்டும். அதற்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட வேண்டும் என்று புதிய விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்ல மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதனால் கடந்த சில மாதங்களாகவே சிலை செய்யும் தொழிலாளர்கள் களிமன் சிலைகள் செய்து வருகின்றனர். ஒவ்வொரு சிலைக்கும் ஒரு வண்ணம், பல வண்ணங்களிலும் சிலைகள் வடிவமைத்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

  புதுக்கோட்டை நகரில் விற்பனைக்கு கடைகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை பெண்கள் ஆர்வத்துடன் பார்த்து பார்த்து வாங்கிச் செல்கின்றனர். - செம்பருத்தி.

0 கருத்துக்கள் :