கூட்­ட­மைப்பின் வெற்­றியால் நெருக்­க­டிக்குள் சர்­வ­தேசம்

29.9.13

வடக்கு மாகாண சபைத் தேர்­தலில் தமிழ் மக்கள் அளித்­துள்ள பேரா­த­ரவு, உல­கத்­தையே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்­துள்­ளது.

உலக ஊட­கங்கள் அனைத்தும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பெற்ற வெற்­றியை பிர­மிப்­போடு பார்க்­கின்­றன.
ஜன­நா­யக ரீதி­யாக தமிழ்­மக்கள் வெளிப்­ப­டுத்­தி­யுள்ள அர­சியல் அபி­லா­சை­களை உலக நாடுகள் அதிர்ச்­சி­யோடும் ஆச்­ச­ரி­யத்­தோடும் நோக்­கு­கின்­றன.
ஏனென்றால், சர்­வ­தேச சமூ­கத்­துக்கு இந்தத் தேர்தல் முடி­வுகள் முக்­கி­ய­மான செய்­தியை எடுத்துக் கூறி­யுள்­ளது.
சர்­வ­தேச சமூ­கத்­தி­னதும், ஊட­கங்­க­ளி­ன தும் முன்­னைய நிலைப்­பா­டு­களை மறு­ப­ரி­சீ­லனை செய்து கொள்­ளவும், சுய­ப­ரி­சோ­தனை செய்து கொள்­ளவும்- இந்த தேர்தல் முடி­வுகள் அழுத்தம் கொடுத்­துள்­ளன.

தமிழ் மக்­களின் நியா­ய­மான உரிமை கோரிய போராட்­டத்­துக்கு, ஒரு­கட்­டத்தில் பயங்­க­ர­வாத முத்­திரை குத்­தப்­பட்­ட­தற்குத் தாமும் பொறுப்பு என்ற உள்­ளார்ந்த குற்­ற­வு­ணர்ச்­சியில் உல­கமே கூனிக்­கு­றுக வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

அந்த ஒரு­த­லைப்­பட்­ச­மான முடிவே, தமி­ழர்­களைப் பேர­ழி­வு­க­ளுக்குள் தள்­ளி­விட்­டது. இந்த வர­லாற்று அவப்­ப­ழியில் இருந்து ஒரு­போதும், சர்­வ­தேச சமூ­கத்­தினால் விடு­பட முடி­யாது.
கடந்த செவ்­வாய்க்­கி­ழமை, ஐ.நா. பொது ச்­ச­பையில் உரை­யாற்­றிய, ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன், இலங்­கையில் போரின் இறு­திக்­கட்­டத்தில் ஐ.நா. தவ­று­களை இழைத்­து­விட்­டது என்று பகி­ரங்­க­மாக ஒப்­புக்­கொண்­டி­ருந்தார்.

உள்­ளக விசா­ர­ணை­களின் முடிவில் ஐ.நா இந்த முடி­வுக்கு வந்­துள்­ளது.
அது­போ­லவே, போருக்குத் துணை நின்ற நாடுகள், இப்­போது தாம் தவறு செய்து விட்­ட­தாக உணரும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.
தற்­போது தவ­று­களை அவர்கள் உணர்­வதால், முள்­ளி­வாய்க்­காலில் தமி­ழர்கள் இழந்­தவை எதுவும் மீளக் கிடைக்கப் போவ­தில்லை.
அழி­வு­களின் மீதும் இழப்­பு­களின் மீதும் நிமிர்ந்­தெழ வேண்­டிய நிலையில் உள்ள தமிழ்­ மக்கள், இந்தத் தேர்தல் மூலம் சர்­வதே­சத்­துக்கு ஒரு தெளி­வான செய்­தியை அளித்­துள்­ளார்கள்.
தமது தாயகப் பகு­தியில், தம்மைத் தாமே ஆளும் வகையில், சுதந்­தி­ர­மாக, நிம்­ம­தி­யாக வாழ்­வ­தற்­கான எதிர்­பார்ப்பை அவர்கள் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.
தமிழ் மக்கள் இத்­த­கைய முடிவை உல­கிற்கு வெளிப்­ப­டுத்­தி­யது இது தான் முதற்­த­ட­வை­யல்ல.
1977ஆம் ஆண்டு தேர்­தலில் வட்­டுக்­கோட்டைத் தீர்­மா­னத்தின் மீது ஆத­ர­வாக வாக்­க­ளித்­தனர்.
ஆனால், அப்­போது தமிழர் விவ­காரம் சர்­வ­தேச மயப்­பட்­டி­ருக்­க­வில்லை.
2004ஆம் ஆண்டு நாடா­ளு­மன்றத் தேர்­தலில் கூட, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்து, தமிழ் மக்கள் தமது விருப்­பினை வெளிப்­ப­டுத்­தினர்.
ஆனால், அதனை சர்­வ­தேச சமூகம் வேறு வித­மாகப் பார்த்­தது.
விடு­தலைப் புலி­களின் மூலம் அடை­யப்­பட்ட வெற்­றி­யா­கவே, இலங்கை அரசு பிர­சா­ரப்­ப­டுத்­தி­யது. சர்­வ­தேச சமூகம் அவ்­வாறே தவ­றாக எடை­போட்­டது.
2004 நாடா­ளு­மன்றத் தேர்­தலில் கிளி­நொச்­சியை உள்­ள­டக்­கிய யாழ். மாவட்­டத் தில், 257,320 வாக்­கு­களை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பெற்­றி­ருந்­தது.
இப்­போதும், கிளி­நொச்சி, யாழ்.மாவட்­டங்­களில் சுமார் இரண்­டரை இலட்சம் வாக்­கு­க­ளையே கூட்­ட­மைப்பு பெற்­றுள்­ளது.
இவை­யி­ரண்­டுக்கும் இடையில் பெரும் வித்­தி­யாசம் இல்லை.
எனவே, 2004 நாடா­ளு­மன்றத் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பெற்ற வெற்றி மோச­டி­யா­னது என்ற சர்­வ­தேச சமூ­கத்­தி­னது அப்­போ­தைய முடிவு தவ­றா­னது என்ற உண்மை இப்­போது வெளிப்படையா­கி­யுள்­ளது.
அதா­வது புலி­களால் தான் கூட்­ட­மைப்பு வெற்றி பெற்­றது என்ற கருத்து உடைக்­கப்­பட்­டுள்­ளது.
புலி­களின் செல்­வாக்­கிற்கு உட்­பட்­டி­ருந்த காலத்­துக்கும், புலி­களின் ஆதிக்கம் இல்­லாத காலத்­துக்கும் இடையில், தமிழ்­மக்­களின் வாக்­க­ளிப்பு பாரம்­ப­ரி­யத்தில் மாற்றம் நிக­ழ­வில்லை.
அதே­வேளை, தமிழ்­மக்கள் அர­சாங்­கத்தை நிரா­க­ரித்து, அர­சாங்­கத்தின் அபி­வி­ருத்திச் செயற்­பா­டு­களை நிரா­க­ரித்து தமக்­கான உரி­மையே முக்­கி­ய­மா­னது என்று தேர்­தலில் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.
இது, போருக்குப் பிந்­திய சூழலில், அர­சி­யல்­தீர்வு ஒன்றே முக்­கி­ய­மா­னது, முதன்­மை­யா­னது என்­பதை உல­கிற்கு எடுத்துக் காட்­டி­யுள்­ளது.
போர் முடி­வுக்கு வந்­த­வுடன், இலங்கை அர­சாங்கம் தமிழ் மக்கள் மத்­தியில் போரி னால் ஏற்­பட்ட காயங்­களை அபி­வி­ருத்தித் திட்­டங்­களின் மூலம் ஆற்­று­வ­தற்கு முற்­பட்­டது.
அதற்கு உலக நாடுகள் பலவும் துணை நிற்­கவும் தவ­ற­வில்லை. எல்லா நாடு­க­ளுமே அதற்கு ஆத­ர­வாக நின்­றன.
பல நாடுகள் அனு­தா­பப்­பட்டு கொடுத்த உத­வி­களை இலங்கை அர­சாங்கம் தனக்குச் சாத­க­மான சூழலை உரு­வாக்­கு­வ­தற்­காகப் பயன்­ப­டுத்திக் கொண்­டது.
ஆனால், மாகா­ண­ சபைத் தேர்தல் முடிவு, இந்த நாடு­க­ளுக்கு, உத­வி­க­ளுக்கு முன்னர் உரி­மைகள் தான் முக்­கியம் என்ற உண்­மையை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.
இதனால், சர்­வ­தேச சமூ­கத்­துக்கு புதிய நெருக்­கடி உரு­வா­கி­யுள்­ளது.

இது­வரை இலங்கை அர­சாங்­கத்தை, மனி­த­ உ­ரி­மைகள் விவ­கா­ரத்தை மட்டும் வைத்துக் கொண்டு அழுத்தம் கொடுத்து வந்த நாடுகள், இறுதித் தீர்­வுக்­கான அழுத்­தத்தை அதி­க­ரிக்க வேண்­டிய நிலைக்கு உள்ளா­கி­யுள்­ளன.
மாகா­ண­ சபைத் தேர்தல் முடிவு வெளி­யா­னதும், இந்­தியா வெளி­யிட்ட அறிக்­கையில், 13வது திருத்­தச்­சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும்படியும் அதற்கு அப்பால் செல்லும்படியும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.
அமெ­ரிக்­காவும் அர­சியல் தீர்­வுக்கு அழுத்தம் கொடுத்­துள்­ளது.
நவ­நீ­தம்­பிள்­ளையின் அறிக்­கை­யிலும் இது சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

அதை­விட, தமிழ்த் தேசியக் கூட்­ட­ மைப்­பு­டனும் வடக்கு மாகா­ண ­ச­பை­யு­டனும், இலங்கை அர­சாங்கம் இணங்கிச் செயற்­பட வேண்டும் என்று எல்லா நாடு­களும் அமைப்­பு­களும் வலி­யு­றுத்திக் கூறி­யுள்­ளன.
மாகா­ண­சபைத் தேர்­தலில் தமிழ்­மக்கள் ஜன­நா­யக ரீதி­யாக வெளிப்­ப­டுத்­தி­யுள்ள கருத்தை, இலங்கை அர­சாங்­கத்­தி­னாலோ சர்­வ­தேச சமு­தா­யத்­தி­னாலோ நிரா­க­ரிக்க முடி­யாது.
இதனால் நிரந்­தர அர­சியல் தீர்வை நோக்கி, இலங்­கையை நகர்த்திச் செல்ல வேண்­டிய நிலை சர்­வ­தேச சமூ­கத்­துக்கு ஏற்­பட்­டுள்­ளது.
போர்க்­குற்­றங்­க­ளுக்கு பொறுப்­புக்­கூற வைப்­ப­தையே, போருக்குத் துணை நின்­ற­தற்­காக தாம் செய்ய வேண்­டிய பிரா­யச்­சித்­த­மாகப் பல நாடுகள் கருதிக் கொண்­டி­ருந்­தன.
இப்­போது, அதற்கும் அப்பால், தவ­றான தமது முடி­வு­க­ளுக்­காக நிரந்­தர அர­சியல் தீர்வு ஒன்றை ஏற்­ப­டுத்திக் கொடுக்க வேண்­டிய பொறுப்பும் உள்­ளது என்­பது, அந்த நாடு­க­ளுக்கு உணர்த்­தப்­பட்­டுள்­ளது.
இது தமிழர் பிரச்­சி­னைக்கு நியா­ய­மான அர­சியல் தீர்வு ஒன்றைப் பெறு­வ­தற்­கான கத­வு­களை அகலத் திறந்து விட்­டுள்­ளது.

ஏனென்றால், இப்­போது தமிழ்­மக்­களின் கருத்தை சர்­வ­தேச சமூகம் நன்­றாக அறிந்து கொண்­டுள்­ளது.
தமிழ் ­மக்­களின் நிலைப்­பா­டு­களின் மீதுள்ள நியா­யத்தைப் புரிந்து கொண்­டுள்­ளது.
இதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு உள்ள சர்­வ­தேச அங்­கீ­கா­ரத்தின் பெறு­மானம் உயர்­வ­டைந்­துள்­ளது.
ஏற்­க­னவே புது­டில்­லியும், வாஷிங்­டனும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு இரா­ஜ­தந்­திர அங்­கீ­கா­ரத்தைக் கொடுத்­தி­ருந்த நிலையில், இப்­போ­தைய தேர்தல் வெற்றி அவர்­களை இன்னும் உய­ரத்­துக்குக் கொண்டு சென்­றுள்­ளது.

தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­க­ளாக, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை முன்­னி­றுத்தி சர்­வ­தேச சமூகம் உரை­யாடும் நிலையை தோற்­று­வித்­துள்­ள­துடன், இலங்கை அரசாங்கத்தையும் அவ்வாறே செயற்படும் படியும் அழுத்தங்களையும் கொடுக்கப் போகிறது.
தமிழ் மக்கள் சரியான நேரத்தில், சரியாக எடுத்த முடிவு, நான்கு ஆண்டுகால அரசியல் வெறுமை நிலையில் இருந்து தமிழர்கள் வெளிவரவும் உதவியாக இருக்கப் போகிறது.
இலங்கையில், ஏற்பட்ட அமைதியின் மைக்கு காரணம் பயங்கரவாதப் பிரச்சினை அல்ல, தமிழர்கள் எதிர்கொள்ளும், உரிமைப் பிரச்சினையே என்ற உண்மை, மீண்டும் ஒரு முறை ஜனநாயக ரீதியாக உலகிற்கு உணர்த்தப்பட்டுள்ளது.
இந்த உண்மையை உலகம் உணர்ந்து கொண்டு, தமிழர் பிரச்சினைக்கு நியாயமான அரசியல்தீர்வு ஒன்றைக் கண்டறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தச்சூழலில், தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கத் துணை நிற்பது ஒன்றே, கடந் தகால அவப்பழிகளில் இருந்து உலகம் விடுபடுவதற்கு இருக்கின்ற ஒரே வழியாகும்.
ஹரி­கரன்

0 கருத்துக்கள் :