நவநீதம்பிள்ளையின் கணவர் பயங்கரவாதியல்ல

4.9.13

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கணவர் ஆபிரிக்க நாட்டு சுதந்திரப் போராளியே தவிர அவர் பயங்கரவாதி அல்ல என்று இலங்கைக்கான ஜெனிவாவின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதி தயான் ஜயத்திலக்க தெரிவித்துள்ளார்.

நவநீதம்பிள்ளையின் கணவர் ஒரு பயங்கரவாதி என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்திருக்கும் கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே தயான் ஜயதிலக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நவநீதம்பிள்ளையின் கணவர் வெள்ளையர்களுக்கு எதிராக ஆபிரிக்க விடுதலை நோக்கிப் போராடிய சுதந்திரப் போராளியே தவிர அவர் பயங்கரவாதியல்ல.

1971ஆம் ஆண்டுகளில் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களில் இருந்தும் அவர் பின்னர் விடுதலை பெற்றிருந்தார். நவநீதம்பிள்ளையின் கணவர் இணைந்திருந்த சுதந்திரப் போராட்டத்திற்கு தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டெலாவே தலைமை வகித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே, அவரை பயங்கரவாதியாக சித்தரிப்பது ஏற்புடையதாகாது என்றும் தயான் ஜயத்திலக்க தெரிவித்துள்ளார்

0 கருத்துக்கள் :