அவதூறு பேசுவது டிவியில், மன்னிப்பு கேட்பது ஃபேஸ்புக்கில், நல்லா இருக்கு

17.9.13

புதியதலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்த நால்வருக்கு மரண தண்டனை பற்றிய விவாதத்தில் சிவகாமி ஐ.ஏ.எஸ்., பேசும்போது ஈழத்தில் புலிப்படைகளில் இருந்த பெண்களைப் பற்றியும், புலிகள் மீதும் பாலியல் அவதூறுகளை அள்ளித் தெளித்துள்ளார்.

இதுவரை விடுதலைப்புலிகள் மீது பெண்களை கற்பழித்தார்கள் என்றோ, பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தினார்கள் என்றோ சிங்களன பேரினவாதிகள் கூட குற்றம் சாட்டியதில்லை, இந்நிலையில் நேற்று டிவியில் பேசிய சிவகாமி ஐஏஎஸ் பெண் புலிகளை ஆண்களின் இச்சைக்காகவே படைகளில் பயன்படுத்தினார்கள் என்று வெளிப்படையாக குற்றம் சுமத்தினார் இது குறித்து மேலும் பேசிய அவர்  இது பத்திரிகை செய்திகளில் வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார், ஆனால் எந்த பத்திரிக்கை எப்போது என்று கூறவில்லை, மேலும் பாரீசில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் என்னிடம் கூறிய ஒளிப்பட பதிவு இருக்கிறது என்றெல்லாம் உளறியுள்ளார் சிவகாமி ஐ.ஏ.எஸ்.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்து பேட்டியெடுத்த பிரபல ஊடகவியலார் அனிதா பிரதாப் குறிப்பிட்டது தான் ஒரு இரவு முழுவதும் 20க்குமே மேற்பட்ட விடுதலை புலிகளுடன் தங்கியிருந்ததாகவும் ஒரு நொடிகூட தான் ஒரு பெண் என்ற அச்சமேற்படாதாவாறு அவர்கள் பார்த்துக்கொண்டார்கள் என்றும் வியந்து போற்றிய ஒரு இயக்கம் பற்றி தான், எதிரியான சிங்களனே வைக்காத ஒரு குற்றச்சாட்டை சிவகாமி ஐஏஎஸ் வைத்துள்ளார்.

இன்று வரை பல நாடுகளின் ராணுவங்களில் பெண்கள் உதவியாளர்களாகவும், நர்ஸ், டாக்டர் போன்ற பணிகளையும் மட்டுமே செய்து வருகிறார்கள், ஆனால் புலிகள் இயக்கம் தான் பெண்களை போர்களத்திற்கு அனுப்பியது, மாலதி படையணி, சோதியா படையணி போன்ற அணிகள் ஆண் போராளிகளுக்கு இணையாக பல போர்களில் பங்கேற்றனர்.

ஈழப்போரின் கடைசி நாட்களான 2009 ஏப்ரல் மாதம் 1,2,3ம் நாட்களில் நடந்த போரில் புலிகளின் பெண்கள் அணி சிங்கள ராணுவத்துக்கு பேரழிவை ஏற்படுத்தியது என்று சிங்கள ராணுவதளபதிகளே குறிப்பிட்டனர். இப்படி போர்களத்தில் பங்கேற்று போராடிய ஒரு இயக்கத்தை பற்றி தான் சிவகாமி ஐஏஎஸ் இந்த கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

தலித் என்ற பெயரை பயன்படுத்தி ஒரு இயக்கத்தை ஆரம்பித்து அதன் தலைவராக இருந்து வந்தால் எதுவும் உளறலாம்  தமிழகத்தின் முற்போக்கு சக்திகளிடமிருந்து எந்த எதிர்ப்பு எதுவும் வராது, அப்படியே  மீறி வந்தாலும் கூட தாங்கள் தலித் என்பதால் தான் எதிர்க்கிறார்கள் என்று சொல்லிவிடலாம் என்ற நினைப்பில் சிவகாமி போன்றோர் பொது இடங்களில் இப்படி உளறுவதை  பொதுமக்கள் பலரும் வெறுப்பாகவே காண்கிறார்கள்.

சிவகாமியின் இந்த பேச்சு விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தொண்டர்களிடமும் மேலும் பல தமிழ் உணர்வாளர்களிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகளின் தொண்டர்கள் ஃபேஸ்புக்கி பல இடங்களில் சிவகாமியின் இந்த பேச்சிற்கு தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

மேலும் பல புலம்பெயர் வாழ் தமிழர்கள் சிவகாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்கள்.

புலிகள் பற்றிய தவறான பேச்சுக்கு ஃபேஸ்புக்கில் வருத்தம் தெரிவித்த சிவகாமி ஐ.ஏ.எஸ்

கோடிக்கணக்கானவர்கள் பார்க்கும் சேனலில் புலிகள் பற்றிய தவறான பேச்சுக்கு ஃபேஸ்புக்கில் வருத்தம் தெரிவித்த சிவகாமி ஐ.ஏ.எஸ்
வலுவான ஆதாரங்கள் எதுவுமில்லாத நிலையில் புலிகள் பற்றி தான் அம்மாதிரியான கருத்து தெரிவித்திருக்க கூடாது என்றும் இலங்கையில் தங்களது சம உரிமையை பெற போராடி உயிரிழந்தவர்கள் மீது பெரிய மரியாதை உள்ளது என்றும் தானும் அது போன்றே சம உரிமைக்காக தமிழகத்திலும் இந்தியாவிலும் போராடி வருவதாக தெரிவித்த அவர் தன் இதயத்தின் ஆழத்திலிருந்து தான் தெரிவித்த கருத்துகளுக்கு வருத்தம் தெரிவித்ததாக கூறியுள்ளார்
Dear All,
Thank you for all the feedback you have given me through facebook for my statement in Pudhiya Thalaimurai T.V. Channel on the 13th September 2013. They were quite educative. In the absence of concrete evidence I sincerely feel that I should not have spoken like that. I have great regards for all those who have struggled for their equal status in Sri Lanka and lost their lives. Even now I regret for my inability to support their cause in Sri Lanka as I am struggling for a similar cause in Tamil Nadu and India. Therefore I apologize from the bottom of my heart for my statement. Sivakami Palanimuthu
-----
அவதூறை கோடிக்கணக்கானவர்கள் பார்க்கும் சேனலில் பேசுவது, மன்னிப்பை மட்டும் சில ஆயிரம் பேர்களை சென்றடையும் உங்கள் ஃபேஸ்புக்கில் தெரிவிப்பதா? சிவகாமி ஐஏஎஸ் அவர்களே நீங்கள் தெரிவிக்கும் இந்த வருத்தம் நேர்மையானதென்றால் அடுத்த முறை சேனலில் பேசும் போது அங்கே தெரிவிக்கவும்
# அவதூறு பேசுவது டிவியில், மன்னிப்பு கேட்பது ஃபேஸ்புக்கில், நல்லா இருக்கு உங்கள் நியாயம்!
http://www.satrumun.net/

0 கருத்துக்கள் :