போராடி மீட்கப்பட்ட சிறுமி தேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

28.9.13

10 மணி நேர போராட்டத்திற்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி தேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே  புலவன்பாடி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர்,  தனது நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டியுள்ளார்.  அதில் தண்ணீர் கிடைக்காததால், சாக்குப் பை கொண்டு அந்த கிணற்றை மூடி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவரது நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தேவி, ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
இதையடுத்து சிறுமி தேவியை மீட்கும் பணி தீவிரமாக  நடைபெற்றுவந்தது.  இந்த நிலையில் 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுமி தேவி பத்திரமாக மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்ட சிறுமிக்கு அங்கேயே முதலுதவி தரப்பட்டது.  பின்னர் ஆரணி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

  அதன்பின்னர் வேலூர் அரசு மருத்துவ கல்லூரிமருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு சிகிச்சை பலனின்றி தேவி பரிதாபமாக உயிரிழந்தார்.

0 கருத்துக்கள் :