வெற்று கூச்சல் இலங்கை தமிழர்களை காப்பாற்றாது

26.9.13

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கையின் வடக்கு பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறது. முதல்-மந்திரி பொறுப்பு ஏற்கிற விக்னேஷ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தம் மற்றும் பொது மக்களுக்கு பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன்.

இனிமேல் தமிழர் வாழ்க்கையில் வசந்தம் வீசும் என்ற நம்பிக்கை துளிர் விட்டு இருக்கிறது. வெளிவிவகாரத்துறை மந்திரி சல்மான்குர்ஷித் அக்டோபர் முதல் வாரத்தில் இலங்கை செல்ல இருக்கிறார். இலங்கையில் அமைதியான வாழ்க்கை முறையை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தான் செய்ய முடியும் என்பதற்கு இந்த தேர்தல் ஒரு எடுத்துக்காட்டு.

இந்த தேர்தலே இந்திய அரசினுடைய அழுத்தத்தால் தான் நடந்தது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சொல்லியிருக்கிறார் என்பதை நான் நினைவு கூற ஆசைப்படுகிறேன். வெற்றுக்கூச்சல்களும், அடாவடி சவால்களும் இலங்கை தமிழர்களை காப்பாற்றாது என்பதை தமிழகத்தில் இனியாவது சிலர் உணர வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :