ஈழத்தமிழரை அமெரிக்கா காப்பாற்ற வேண்டும்:ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு

20.9.13


வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், வீட்டு சின்னத்தில் இலக்கம் 1 போட்டியிடும் திருமதி அனந்தி சசிதரன் (எழிலன்) அவர்கள் மீது இன்று அதிகாலை 12.20 மணியளவில் சிங்கள இராணுவம் மற்றும் ஈபிடிபி ஆகியோர் இணைந்து கொலை வெறித்தாக்குதலை மேற்கொண்டார்கள். இது திருமதி அனந்தி சசிதரன்(எழிலன்) அவர்கள் மீதான தாக்குதல் என்று மட்டும் பாராமல், எமது உரிமைக்காக குரல் கொடுத்தால் இப்படித்தான் தாக்குவோம் என்று சிங்கள அரசாங்கம் தமிழருக்கு மீண்டும் கூறியுள்ள செய்தியாகும். திருமதி அனந்தி சசிதரன் (எழிலன்) அவர்கள் ஒரு பெண் என்றும் பார்க்காமல் இப்படியான தாக்குதல் நடபெற்றமையானது, வடகிழக்கில் போரினால் கணவரை இழந்த 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகளுக்கும், 50ஆயிரம் அநாதையாகிப்போன பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு அற்ற நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது. இச்சம்பவங்கள் மூலம் ஒரு செய்தி சொல்லப்படுகின்றது. அது என்னவெனில் தேர்தல் மூலம் சிறிலங்காவில் நல்லிணக்கமும், சமாதனமும் ஏற்படும் என்று நினைப்பவர்களுக்கு எப்பவுமே தமிழனும் சிங்களவனும் ஒன்றாக வாழ முடியாது என்பதையும், அப்படி வாழ்ந்தால் தமிழன் சிங்களவனுக்கு அடிமையாக மட்டுமே வாழமுடியும் என்பதையும், உரிமைக்கு குரல் கொடுத்தால் இது தான்விளைவு என்பதை தமிழருக்கும் சர்வதேசத்துக்கும் சொல்லாமல் செல்லியுள்ளது சிங்கள அரசு. எனவே எனியும் இலங்கையில் ஜனநாயகம் மலரும், உரிமைகளை சிங்கள அரசாங்கம் தமிழருக்கு உரிமையை பகிர்ந்து கொடுக்கும் என்ற எண்ணத்தினை கைவிட்டு அமெரிக்க உடனடியாக நேரடியாக ஈழத்தமிழரை காப்பாற்ற வேண்டும். விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு ஒருவகையில் சிங்கள அரசாங்கத்திற்கு உதவிய அமெரிக்கா, புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள ஆபத்தான சூழ்நிலையில் இருந்து அவர்களை உடனடியாக காப்பாற்றுமாறு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபாமா அவர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளது.

0 கருத்துக்கள் :