இலங்கையில் ஒரு அதியுயர் பாதுகாப்பு வலயம் மட்டுமே உள்ளது!- கோத்தபாய

4.9.13

உலகில் மிகவும் அமைதியான, நிலையான, ஜனநாயக மற்றும் பாதுகாப்புடன் கூடிய நாடாக இலங்கை மாறியுள்ளது எனவும் இதனால் இலங்கையின் தலையெழுத்தை மாற்றியமைக்க சில மேற்குலக சக்திகள் முயற்சித்து வருகின்றன எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தினார்.
கொழும்பில் நேற்று ஆரம்பமான பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றும் போது இவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இருந்த அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் அனைத்து நீக்கப்பட்டு விட்டன. நாட்டில் இருக்கும் ஒரே ஒரு அதியுயர் பாதுகாப்பு வலயம் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி மட்டுமே.
எனினும் அந்த அதியுயர் பாதுகாப்பு வலயம் அமைந்துள்ள பிரதேசத்தில் இருக்கும் விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றிக்கும் மக்கள் சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டு வர அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
அந்த பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்களை திறந்து, தமிழ்மொழி பேசுபவர்களை பொலிஸ் சேவையில் இணைத்து பிரதேசத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு முழுமையாக பொலிஸாரிடம் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

0 கருத்துக்கள் :