அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அறிக்கையின் முகப்பு அட்டையில் ஈழப்பெண்கள்

19.9.13

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள, To Walk the Earth in Safety என்ற அறிக்கையின் முகப்பு அட்டையில், சிறிலங்காவின் வடக்கில் மிதிவெடி அகற்றும் தமிழ்ப் பெண்களின் ஒளிப்படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், அரசியல் இராணுவ விவகாரப் பிரிவின் ஆயுதங்களை அகற்றும் பணியகத்தினால் To Walk the Earth in Safety என்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் ஆயுதங்களை அழிப்பது மற்றும் செயலிழக்கச் செய்வது தொடர்பான அமெரிக்காவின் பங்களிப்பை விபரிக்கும் இந்த அறிக்கையின் முகப்பு அட்டையில், மிதிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்ப் பெண்களின் படம் இடம்பெற்றுள்ளது.

  2012ம் ஆண்டில் சிறிலங்கா உள்ளிட்ட 35 நாடுகளில் மரபுவழி ஆயுதங்களை அழிப்பதற்காக அமெரிக்கா 149 மில்லியன் டொலரை செலவிட்டுள்ளது. 2002 தொடக்கம் 2012 வரையான காலப்பகுதியில் சிறிலங்காவில் மதிவெடிகளை அகற்றுவதற்கு அமெரிக்கா 35 மில்லியன் டொலரை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 4.8 மில்லியன் டொலர் இதற்காக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


http://www.puthinappalakai.com/view.php?20130919109084

0 கருத்துக்கள் :