மனைவியை நண்பனிடம் அடகு வைத்த கணவன்; திரும்பிச் செல்ல விருப்பமில்லை என மனைவி அடம்பிடிப்பு.

12.9.13

அழகிய போதை­வஸ்­துக்கு அடி­மை­யான 34 வயதான இரு குழந்­தை­களின் தந்தை ஒருவர் தனது அழ­கிய மனை­வியை 25,000 ரூபா­வுக்கு அடகு வைத்த சம்­ப­வ­மொன்று தம்­புள்ள பொலிஸ் நிலை­யத்தில்  அம்­ப­லத்­துக்கு வந்­துள்­ளது.

தம்­புள்ள விஹார சந்­தியைச் சேர்ந்த போதை­வஸ்­துக்கு அடி­மை­யான நப­ரினால் ஒன்­றரை மாத காலத்­துக்கு பெற்ற கட­னுக்கும் அதற்­கான வட்­டிக்கும் ஈடாக தமது 30 வயது மனை­வியை சுய விருப்­பத்தின் பேரில் நண்­ப­னிடம் ஒப்­ப­டைத்­துள்ளார்.

38 வய­தான தம்­புள்ள பொஹோரன் வெலியைச் சேர்ந்த நண்­பரும் திரு­ம­ண­மா­னவர். அவர் தனது மனை­விக்குத்
தெரி­யாமல் வேறு பிர­தே­ச­மொன்றில் வாட­கைக்கு அறை­யொன்றை எடுத்து அப்­பெண்ணை தங்க வைத்து அவ­ருக்குத் தேவை­யான உணவு மற்றும் ஏனைய வச­தி­களைச் செய்து கொடுத்­துள்ளார்.

போதை­வஸ்­துக்கு அடி­மை­யான நபர் குறிப்­பிட்ட காலம் முடி­வ­டைந்தும் தனது நண்­ப­னையும் மனை­வி­யையும் சந்­தித்து தனது மனை­வியை மீட்டுச் செல்ல தயா­ரான போதும் மனைவி திரு­ம­ண­மான தனது கண­வ­ருடன் செல்ல மறுப்புத் தெரி­வித்­துள்ளார். எவ்­வ­ளவு கெஞ்சிக் கேட்டும் மனைவி தன்­னுடன் வர மறுப்பு தெரி­வித்­ததால் பொலிஸ்­நி­லை­யத்­துக்குச் செல்ல வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து பொலிஸார் மனைவி, நண்பர் மற்றும் முறைப்­பாட்­டா­ளரை பொலிஸ் நிலை­யத்­துக்கு வர­வ­ழைத்து பிரச்­சி­னையை சுமு­க­மாகத் தீர்க்க முயற்­சித்­துள்­ளனர். தனது கணவர் போதை­வஸ்­துக்கு அடி­மை­யா­னவர் என்றும் தன்னைக் கொடு­மைப்­ப­டுத்­து­வ­தா­கவும் கண­வரின் நண்பர் தன்னை முறை­யாகப் பரா­ம­ரித்­த­தா­கவும் மனைவி பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார். நண்­பரும் அவரை ஏற்றுக் கொள்ள சம்­ம­தித்­ததை அடுத்து அப்பெண் தனது தாயி­ட­மி­ருந்த தனது இரண்டு குழந்­தை­க­ளுடன் கணவனின் நண்பருடன் சென்றுள்ளார்.

போதைவஸ்துக்கு அடிமையான நபர் மனைவியையும் பிள்ளைகளையும் இழந்து வெறுங்கையுடன் வீடு திரும்பியுள்ளார்.
 (எஸ்.கே)metronews

0 கருத்துக்கள் :