இலங்கை வீரர்களுக்குத் தடை விதிக்கக் கோரி போராட்டம்

30.9.13


இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்நிலையில் காலை 10.30 மணிக்கு அந்த பகுதிக்கு வந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹோட்டலுக்குள் நுழைய முயன்றனர்.

 அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு அவர்களை போலீஸார் விடுவித்தனர். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இலங்கை வீரர்களுக்குத் தடை விதிக்கக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்

0 கருத்துக்கள் :